ஹோம் /தேனி /

கம்பம் நகரை மிரள வைத்த மஞ்சள் படை.. பகவதி அம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா கோலாகலம்..

கம்பம் நகரை மிரள வைத்த மஞ்சள் படை.. பகவதி அம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா கோலாகலம்..

கம்பம்

கம்பம் பகவதி அம்மன் கோவில் திருவிழா

Cumbum Bagavathi Amman Temple Festival 2022 : தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள மிகவும் புகழ் பெற்ற கம்பம் பகவதி அம்மன் கோயில் மூன்று நாள் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.  

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Theni, India

  தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள மிகவும் புகழ் பெற்ற கம்பம் பகவதி அம்மன் கோயில் மூன்று நாள் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா, மாட்டு வண்டி பந்தயம் போன்றவை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

  தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பார்க் திடல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகே அமைந்துள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா கம்பம் பகுதியில் உள்ள காமுகுல ஒக்கலிகர் சமுதாயத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். மூன்று நாள் திருவிழாவான பகவதி அம்மன் கோயில் திருவிழா இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது..

  திருவிழாவின் முதல் நாளில் கம்பம் பகுதியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நிர்வாக குழு சார்பாக பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது, தொடர்ந்து  ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது..

  மேலும் படிக்க: மதுரை மீனாட்சியம்மனுக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த முத்தீஸ்வரர் கோயில்.. அறியப்படாத தகவல்கள்..!

  திருவிழாவின் இரண்டாவது நாள் மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் ஊர்வலம், மாவிளக்கு எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். அதனை தொடர்ந்து விழாவில் நிறைவான 3வது நாள் பொதுமக்களின் தரிசனம் , வேடவண்டி, முளைப்பயிர் ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது .

  கம்பம் பகவதி அம்மன் கோவில் திருவிழா

  மஞ்சள் நீராட்டு விழா :-

  கம்பம் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக மஞ்சள் நீராட்டு விழாவானது இரண்டாம் நாளில் காலை 7 மணி முதல் பகவதி அம்மன் கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மஞ்சள் உடை அணிந்து ஒருவருக்கொருவர் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி விளையாடும் மஞ்சள் நீராட்டு விழா மிகவும் புகழ்பெற்றது. கோவில் முன் தொடங்கும் இந்த மஞ்சள் நீராட்டு விளையாட்டு விழாவில், இளைஞர்கள் பலர் பத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மஞ்சள் நீரால் கலக்கப்பட்ட தண்ணீரை அப் பகுதியில் கூடியிருக்கும் பொதுமக்கள் மீது ஊற்றுவதும் பொதுமக்கள் அந்த இளைஞர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றுவதும் , ஒருவருக்கொருவர் மீது மஞ்சளை பூசி விளையாடுவதும் இவ்விழாவின் சிறப்பு.

  மேலும் படிக்க:  இந்த தெருவுக்குள்ள நுழைஞ்சாலே மிரண்டு போவீங்க..! மதுரை 10 தூண் சந்து சிறப்புகள்..!

  இந்த மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்க பல்வேறு ஊர்களிலும் இருந்தும் பொதுமக்கள் வருகை புரிகின்றனர். இந்த மஞ்சள் நீராட்டு விழாவை புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞர்கள் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவது இவ்விழாவிற்கான கூடுதல் சிறப்பு.

  கம்பம் பகவதி அம்மன் கோவில் திருவிழா

  மாட்டு வண்டி பந்தயம்: 

  அருள்மிகு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, காமுகுல ஒக்கலிகர் சமுதாயத்தின் கோயில் நிர்வாகம் சார்பில் இரட்டை மாட்டு வண்டி போட்டி கம்பம் மெட்டு சாலையில் இன்று நடத்தப்பட்டது.  இன்று காலை 6 மணிக்கு கம்பம் மெட்டு பைபாஸ் சாலையில் இரட்டை மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது .

  மேலும் படிக்க:  கருவை காத்தருளும் தஞ்சை கர்பராக்க்ஷாம்பிகை கோயில் சிறப்புகள் பற்றி தெரியுமா?

  63வது ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் கம்பம் மெட்டு பைபாஸ் சாலையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 வகையான மாடுகளுக்கு தனித்தனியாக பந்தயம் நடத்தப்பட்டது. கம்பம் நகரில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், கூடலூர், கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்தும் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

  கம்பம் பகவதி அம்மன் கோவில் திருவிழா

  இந்த மாட்டு வண்டி போட்டியை கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் துவங்கி வைத்தனர். இன்று காலை தொடங்கிய இந்த மாட்டு வண்டி பந்தயமானது, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, கரிச்சான் மாடு, நடுநாடு, பெரிய மாடு என ஐந்து வகையான மாடு வகைகளை கொண்டு, 5 பிரிவாக தனித்தனியாக நடைபெற்றது.

  பரிசுத் தொகை :-

  இதில் பெரியமாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹30,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ₹25,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக ₹20,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

  மேலும் படிக்க:  புவிசார் குறியீடு பெற்ற துணிகளில் கதை சொல்லும் கலம்காரி ஓவியம்

  நடுமாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹25,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ₹20,000ரூபாயும் மூன்றாம் பரிசாக ₹15,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  கரிச்சான் மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹20,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ₹15,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக ₹10,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

  பூஞ்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹15, 000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ₹10,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக ₹ 7,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

  தேன்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹10,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ₹7,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக ₹5,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

  கம்பம் பகவதி அம்மன் கோவில் திருவிழா

  அதே போல் மாட்டு வண்டி போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற நபர்களுக்கு கம்பம் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பரிசு தொகை வழங்கினர் . இந்த மாட்டு வண்டி போட்டியில் பங்கேற்க போட்டியாளர்கள் நுழைவுக் கட்டணமாக சில குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டியது குறிப்பிடத்தக்கது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  கம்பம் - கம்பம் மெட்டு பைபாஸ் சாலையில் சீறி பாய்ந்த மாட்டுவண்டி பந்தயத்தை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் குவிந்தனர் இந்த மாட்டு வண்டி பந்தயமானது பொது மக்களின் ஆரவாரத்துடனும் போலீசாரின் பாதுகாப்புடனும் நடைபெற்றது

  Published by:Arun
  First published:

  Tags: Cumbum, Local News, Theni