ஹோம் /தேனி /

கம்பத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் ஏற்பாடு

கம்பத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் ஏற்பாடு

X
கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டி 

Theni: தேனியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் நகர் கேப்டன் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் பரிசு கோப்பை வழங்கினார்.

கிரிக்கெட் போட்டி

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி தெற்கு மாவட்டம் கம்பம் நகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி குமுளி செல்லும் சாலையில் உள்ள கேப்டன் மைதானத்தில் நடந்தது.

மாநில அளவில் 32 அணிகள் கலந்து கொண்ட போட்டியானது கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணியினருக்கு முதல் பரிசாக 20,000 ரொக்க பணமும் இரண்டாம் பரிசு பெறும் அணியினருக்கு 15,000  மூன்றாம் பரிசை பெரும் அணியினருக்கு 10,000 ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கு பெற்று சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: முட்டாள் ஒருவர் கிடைத்த பின் ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலகுவேன் - எலான் மஸ்க்

இதில் இறுதியாக கேப்டன் கிரவுண்ட் அணி முதல் பரிசை வென்றது, இரண்டாவது பரிசை பகவத் ஜூவல்லரி அணியினரும் மூன்றாவது பரிசு தென்றல் அணியினரும் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கம்பம் வடக்கு மற்றும் தெற்கு நகர செயலாளர்கள் சூர்யா செல்வகுமார், வீரபாண்டியன் தேனி மாவட்ட திமுக துணைச் செயலாளர் குரு இளங்கோ, கம்பம் நகர மன்ற உறுப்பினர் கம்பம் சாதிக் உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Tamil News, Theni, Udhayanidhi Stalin