ஹோம் /தேனி /

தேனியில் கிரேன் கவிழ்ந்து விபத்து - ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

தேனியில் கிரேன் கவிழ்ந்து விபத்து - ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

X
கவிழ்ந்து

கவிழ்ந்து கிடக்கும் கிரேன்

Theni | தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமன்தராய பெருமாள் கோவில் அருகே திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத கிரேன் கவுந்து விபத்துக்குள்ளானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமன்தராய பெருமாள் கோவில் அருகே திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத கிரேன் கவுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து

தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு குழாய் அமைத்து மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்காக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரத்தில் குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த குழாய் பதிக்கும் பணியானது தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி பகுதியில் நடைபெற்ற பொழுது, குழாய் பதிக்கும் பணியில் இருந்த ராட்சத கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி அனுமந்தராய பெருமாள் கோயிலில் அருகே குமுளி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்காக ராட்சச குழாய்களை தூக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரியிலிருந்து ராட்சத குழாய்களை இறக்கும் பொழுது கிரேன் நிலை இழந்து எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. ராட்சத கிரேன் கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.இந்த விபத்து காரணமாக திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

தேனி : பெண் குழந்தைகள் தினம்- பெண்களின் உரிமைகளைக் காக்க உறுதிமொழி ஏற்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தமபாளையம் காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்தை ஒழுங்கு செய்து விபத்துக்குள்ளான கிரேனை அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni