ஹோம் /Theni /

தேனியில் அதிகரிக்கும் கொரோனா - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

தேனியில் அதிகரிக்கும் கொரோனா - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

தேனியில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முகக்கவசம் அணியாத நபர்களுக்கு வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை போன்ற துறைகள் மூலம் 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

தொற்றுப் பரவல் :-

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகிய மக்கள் மூன்று அலைகளை சந்தித்து பெரும் உயிர் இழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும், மனநிம்மதியும் இழந்து மிகவும் அவதிப்பட்டு வந்தனர். தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததன் மூலமும், அனைவரும் தடுப்பு செலுத்தி கொண்டதாலும் கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை நீக்கியது.

முகக்கவசத்துடன் பள்ளி மாணவர்கள்

ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தினசரி பாதிப்பு தமிழகத்தில் ஆயிரத்திற்கும் குறைவான எண்களிலேயே பதிவாகி கொண்டிருந்த நிலையில், கடந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி முதல் தொடர் பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்தது.

முகக்கவசத்துடன் பொதுமக்கள்

தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது.தொடர்ந்து தினசரி பாதிப்பு விகிதம் அதிகரித்து கொண்டே சென்றதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்ற கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

முகக்கவசத்துடன் பள்ளி மாணவர்கள்

குறிப்பாக இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,815 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் எனவும், இரண்டு டேஸ் செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தவும் அறிவுரை கூறப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை

பல மாவட்டங்களில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கட்டுப்பாடு :-

இதேபோல தேனி மாவட்டத்திலும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினசரி பாதிப்பு இவ்விதம் 4, எட்டு என இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தேனி மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒரே பள்ளியை சேர்ந்த 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்புக்குள்ளான மாணவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் பொது வெளிகளில் சுற்றித் திரியும் நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ரூ.500/- அபராதம்' விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட தமிழக அரசின் வழிக்காட்டு தெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni