ஹோம் /தேனி /

தோனியை கண்டெடுத்த கூச் பெஹர் டிராபி.. தேனியில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் தமிழக அணி 545 ரன் குவிப்பு..

தோனியை கண்டெடுத்த கூச் பெஹர் டிராபி.. தேனியில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் தமிழக அணி 545 ரன் குவிப்பு..

தேனியில் கிரிக்கெட் போட்டி

தேனியில் கிரிக்கெட் போட்டி

Theni District News : தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூச் பெஹர் டிராபி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 545 ரன்கள் குவித்தது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் தப்புகுண்டு அருகே உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மைதானத்தில் பி.சி.சி.ஐசார்பில் 19 வயதிற்குட்பட்டோருக்கான கூஜ் பெகர் தொடர் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

19 வயதிற்குட்பட்ட மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கூச் பெஹர் டிராபி கிரிகெட் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள 37 மாநிலங்களில் நடத்தபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.

தேனி அருகேயுள்ள தப்புகுண்டுவில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசனுக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முதல் இந்த போட்டிகள் துவங்கின. 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாடு – மிசோரம் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட்டிங்கினை தேர்வு செய்து, பேட்டிங் செய்தது. முதல்நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு அணியினர் மிசோராம் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து அணியின் ரன் எண்ணிக்கையினை மளமளவென அதிகப்படுத்தினர்.

இதையும் படிங்க : ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் - பவுலரை பதம் பார்த்த ருதுராஜ் கெய்க்வாட்

ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 3 விக்கெட் இழப்பிற்கு 545 ரன்கள் குவித்தது தமிழக அணி. இதில் தமிழக வீரர் முகமது 307 ரன்களும், மற்றொரு வீரர் ஆதிஸ் 219 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

தேனியில் கிரிக்கெட் போட்டி

இரண்டாம் நாளாக இன்றைய போட்டியில் தமிழக வீரர்கள் துவக்கம் முதலே அதிரடி காட்டினர். தொடர்ந்து தமிழக அணியினர் மிசோராம் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறிடித்து அணியின் எண்ணிக்கையினை மளமளவென உயர்த்தி வருகின்றனர். இன்றைய ஆட்டம் முடிவடைந்தவுடன் மிசோரம் அணி நாளை பேட்டிங் செய்ய உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதே அண்டர்-19 கூச் பெஹர் ட்ராபியில் தான் கண்டறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூச்பெஹர் டிராபியின் இறுதி ஆட்டம் ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ளது.

First published:

Tags: Cricket, Dhoni, Local News, Theni