ஹோம் /தேனி /

தேனி மேலப்பேட்டை நாடார் சரஸ்வதி கல்லூரியில் பட்டமளிப்பு விழா - மாணவிகள் உற்சாகம்..

தேனி மேலப்பேட்டை நாடார் சரஸ்வதி கல்லூரியில் பட்டமளிப்பு விழா - மாணவிகள் உற்சாகம்..

X
பட்டமளிப்பு

பட்டமளிப்பு விழா  

Theni News | 2021 ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இளங்கலை முதுகலை பிரிவு மாணவ- மாணவியர் சுமார் 900 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா, கல்லூரியில் நிர்வாக குழு தலைவர் ராஜமோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர்.S.சித்ரா பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று வரவேற்பு உரை ஆற்றினார். கல்லூரி வளாகத்தில் உள்ள k3 அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.

இந்த கல்லூரியில் 2021 ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இளங்கலை முதுகலை பிரிவு மாணவ- மாணவியர் சுமார் 900 பேருக்கு  சிறப்பு விருந்தினர்  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம் மாணவ மாணவர்களுக்கு பட்டமளித்தனர் .

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனையடுத்து விழாவில் பேசிய  சிறப்பு விருந்தினர் ஆறுமுகம், கல்விப்பட்டம் பெறுவதோடு நின்று விடாமல், தொடர்ந்து படிக்க வேண்டும் எனவும், தலை குனிந்து படித்தால் நாளை அது மாணவ மாணவிகளை தலைநிமிர்த்தும் எனவும், மாணவ மாணவிகள் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நிகழ்வில் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் ஆறுமுகம்  பேசினர்.

இந்த பட்டமளிப்பு நிகழ்வில்  கல்லூரியின் தலைவர் ராஜா மோகன், துணை தலைவர் கணேஷ், பழனியப்பன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்

First published:

Tags: Local News, Theni