தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான முல்லைக்கொடி, தாண்டிக்குடி , பெரியாறு அணை மற்றும் சிவகிரி மலைத்தொடர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன
மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது . நேற்றைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதிகளில் 21 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
152 அடி கொள்ளளவு கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் இன்று காலை நிலவரப்படி 130. 40 கன அடியாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அணையில் நீர் இருப்பு 4,791 மில்லியன் கன அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 235 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு, 100 கன அடி, குடிநீர் தேவைக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .
கடந்த ஒரு சில வாரங்களாகவே கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. கடந்த சில நாட்களில் அணைக்கு வரும் நீர்வரத்து 500 கன அடிக்கு மேல் சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் முல்லை பெரியாறு அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் கடந்த வருடத்தைப் போல இந்த வருடம் ஜூன் மாதம் தொடக்கத்திலே நெல் நடவு பணிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால். முல்லைப் பெரியாறு பாசன நீரை பயன்படுத்தி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14.707 ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் நடவு பணிக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.