ஹோம் /தேனி /

தேனியில் தொடரும் மழை.. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு : தற்போதைய நிலவரம் என்ன?

தேனியில் தொடரும் மழை.. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு : தற்போதைய நிலவரம் என்ன?

தேனி - மழை நிலவரம்

தேனி - மழை நிலவரம்

Theni Rains | தேனி மாவட்டத்தில் தொடர்ந்து தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. முல்லைப் பெரியாறு, வைகை அணை உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது .

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை புதுச்சேரி உட்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தினந்தோறும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தேக்கடி மற்றும் முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தேனி அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

அதன்படி, பெரியாறு அணைப்பகுதியில் 38 மில்லிமீட்டர் மழை அளவும், தேக்கடியில் 30.2 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 599.0 மில்லி மீட்டர் மழையளவும், சராசரியாக 49.92 மில்லி மீட்டர் மழையளவும் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா?

நீர்மட்டம் :-

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சண்முகநதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் தற்போதைய (18/10/2022) நீர்மட்டம் குறித்த விவரங்கள் ...

71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போதைய நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 6158 கனஅடியாக உள்ளது. 7574 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 55.0 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். அணைக்கு நீர்வரத்து 589 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 40 கன அடியாகவும் உள்ளது

126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.27 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 279 கன அடியாக உள்ளது . 30 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:  திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

52.55 அடி உயரம் கொண்ட சண்முக நதி அணையின் நீர்மட்டம் 52.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 117 கனஅடி . தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.50 (142) அடியாக உள்ளது. நீர்வரத்து 3908 கன அடி. 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையில் நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 3727 கன அடியாக இருந்த நிலையில் இன்று 3908 கன அடியாக நீர்வரத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Theni, Vaigai dam level