முகப்பு /தேனி /

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி.. தேனியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.. 

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி.. தேனியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.. 

X
தேனியில்

தேனியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்

Theni News | ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டவர்கள் களத்தில் இருந்தனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது.

மேலும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட இ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு சிலை சிக்னல் பகுதியில் தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையிலும் தேனி நகர செயலாளர் கோபிநாத் முன்னிலையிலும் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

முதலில் இந்த கொண்டாட்டத்தின்போது நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

First published:

Tags: Congress, Erode, Local News, Theni