முகப்பு /தேனி /

"பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்" தேனியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

"பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்" தேனியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

X
கம்யூனிஸ்ட்

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Theni News | தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி தாலுகா செயலாளர் தர்மர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரியும், புதிய கல்விக் கொள்கைபாடத்திட்டத்தில் மத சார்பின்மைக்கு எதிரான கருத்துக்களை அகற்ற கோரியும், ஹிந்தியை திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் மத்திய அரசின் ஆட்சியில் மக்கள் வாழ்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், கார்ப்பரேட் முதலாளிகள் தொடர்ந்து சொத்து சேர்த்து வருவதாகவும் கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலைவாய்ப்பு

படித்த இளைஞர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை உள்ளதாகவும் , வேலைவாய்ப்பு அதிகப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

மத்திய அரசின் கண்டிக்கத்தக்க நடவடிக்கைகள் அடங்கிய வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Protest, Theni