Home /theni /

Theni | போடியில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

Theni | போடியில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சனிக்கிழமையன்று காலை 10 முதல் மாலை 4  மணி வரை போடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் போடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    போடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 10 முதல் மாலை 4 மணி வரை போடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன்தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: போ. அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி, போடி நகர் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி