ஹோம் /தேனி /

விடுதி மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி.. தேனியில் பரபரப்பு..

விடுதி மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி.. தேனியில் பரபரப்பு..

விடுதி மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

விடுதி மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

Theni District News : தேனியில் விடுதி மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் திரவியம் கலை அறிவியல் கல்லூரி நிறுவனங்களுக்கு சொந்தமான செவிலியர் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வரும் செவிலியர் மாணவி லட்சிதா இன்று காலை விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டார் என கூறப்படுகிறது. தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் காயம் அடைந்த மாணவியை, அங்கிருந்த விடுதி பணியாளர்கள் மூலம் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு காயம் அடைந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக பெரியகுளம் வட்டாட்சியர் காஜா செரீப் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்கொலை செய்து கொண்ட மாணவி உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவர் மகளான 19 வயதாகும் ரக்சிதா என தெரியவந்தது.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

மேலும் மாணவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால், கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். மாணவியின் பெற்றோர், வரும் சனிக்கிழமை வந்து அழைத்துச் செல்வதாக கூறியதை தொடர்ந்து மாணவி மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்ததாக கூறினர்.

மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவியிடம் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்ததை தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni