Union
Budget 2023

Highlights

ஹோம் /தேனி /

தேனி ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மாணவர்கள்!

தேனி ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மாணவர்கள்!

X
பட்டமளிப்பு

பட்டமளிப்பு விழா 

Uthamapalayam Hajee karutha rowther Howdia College | 2017 - 2020 கல்வியாண்டில் பயின்ற 773 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது .

கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர். ஜெ. குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2017-20 கல்வியாண்டில் பயின்ற 773 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதில் 620 பேர் இளங்கலைப் பட்டப்படிப்புகளிலும் 153 பேர் முதுகலை பட்டப்படிப்புகளிலும் பட்டம் பெற்றனர்.

கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் ஹாஜி எம் .தர்வேஸ் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழா தமிழ் தாய் பாடலுடன் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் ஹாஜி. எச். முகமது மீரான் முன்னிலை வகித்து வரவேற்புரையாற்றினார்.

பின்னர் கல்லூரியின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் அவர்களது துறையில் பட்டம் பெறும் மாணவர்களை மேடைக்கு அழைத்து பட்டம் வழங்கினர் . நிகழ்ச்சியின் இறுதியில் பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர் .

கல்லூரியின் ஆட்சிமன்ற குழு தலைவர் ஜனாப். எஸ் .செந்தால் மீரான், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also read | கும்பக்கரை அருவிக்கு குளிக்கப் போறீங்களா? - இதை படிச்சிட்டு போங்க

மகிழ்ச்சியில் மாணவ மாணவிகள் :-

படிப்பில் முன்னேறிய மாணவ மாணவிகள் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் எனவும், கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை பெற்றோர் மற்றும் ஆசிரியரின் அரவணைப்பில் இருந்த மாணவிகள் தற்போது வெளி உலகத்திற்கு சென்று வெளி உலகத்தை காண உள்ளதால் தைரியத்துடன் இருக்க வேண்டும் எனவும், பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி அறிவுரை வழங்கினார் கல்லூரியின் சிறப்பு விருந்தினரான ஜெ. குமார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது ஆசிரியர்களையும், சக தோழிகளையும் சந்தித்த உற்சாகத்தில் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தனர். பட்டம் பெற்ற பின்பும் கூட கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே நீண்ட நேரம் நேரம் செலவழித்து, தோழிகள் மற்றும் ஆசிரியரிடம் மனம்விட்டுப் பேசிய பின்னரே கல்லூரியை விட்டு பிரிந்து சென்றனர்.

First published:

Tags: Graduation, Local News, Theni