தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹளதியா கல்லூரியில் கல்லூரி நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி நாள் விழா :-
மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் மிகவும் தொன்மை வாய்ந்த மற்றும் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரால் 'ஏ' டபுள் பிளஸ் அங்கீகாரம் பெற்ற உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் 67 வது கல்லூரி நாள் விழா, கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 2500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் இக்கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டும் கல்லூரி நாள் விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு 67 வது ஆண்டு கல்லூரி நாள் விழா நடைபெற்றது . மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியோடு தூங்கிய இந்த விழாவில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் ஹாஜி.எம்.அப்துல் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரின் சிறப்புரையானது மாணவர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வண்ணமாக அமைந்திருந்தது.
மேலும் கல்லூரியின் முன்னாள் மாணவரும், காவல்துறை தலைமை இயக்குனர், இந்தியன் போலீஸ் அகாடமியின் இயக்குனருமான ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றியதோடு கல்வியிலும் கலையிலும் சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுப் பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.
<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>
கல்லூரியில் பயிலக் கூடிய மாணவ, மாணவிகள் வருங்காலங்களில் தன்னைப் போல் ஓர் உயர் பதவி வகித்து நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்ற வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் ஏற்படுத்தும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகள் அடங்கிய ஆண்டு அறிக்கையை கல்லூரியின் முதல்வர் ஹாஜி முகமது மீரான் சமர்பித்தார். கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி தர்வேஷ் முகைதீன் மேலாண்மை குழு தலைவர் ஜனாப். செந்தால் மீரான் தலைமை தாங்கி முன்னிலை வகித்தனர். மேலும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni