ஊர் ஊராக சென்று அரங்குகள் அமைத்து மனித சாகசங்கள் மூலம் பொதுமக்களை மகிழ்விக்கும் சர்க்கஸ் கலையின் மீது பொதுமக்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளதால் சர்க்கஸ் தொழில் நலிவடைந்து வருவதாக சர்க்கஸ் கலைஞர்கள் கூறி வருகின்றனர்.
சர்க்கஸ் தொழில் :-
மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான சாகசங்கள் செய்து பொதுமக்களுக்கு விருந்து வைக்கின்றனர் சர்க்கஸ் கலைஞர்கள். ஊர் ஊராக சென்று சர்க்கஸ் கூடாரங்கள் அமைத்து , பயிற்சி செய்த பல ஆபத்தான சாகசங்கள் மூலமும் கேளிக்கை மூலமும் பொதுமக்களை மகிழ்வித்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர் சர்க்கஸ் கலைஞர்கள்.
உயிரையும் துச்சமாக நினைத்து தினசரி மூன்று முதல் நான்கு காட்சிகள் தொடர்ந்து ஓயாமல் சாகசங்கள் செய்து உழைத்துக் கொண்டிருக்கும் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே செல்கிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சர்க்கஸ் மீதான ஆர்வம் பொதுமக்களுக்கு அதிகமாக இருந்தது. நேரடியாக மனித சாகசங்களை பார்த்து வியப்படைந்த மக்களின் கூட்டம் மெல்ல மெல்ல தேய்ந்து. தற்போது திரையரங்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலைக்கு முக்கிய காரணமாக சர்க்கஸ் தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் கூறுவது , மனித சாகசங்களை தவிர்த்து விலங்குகள் மூலம் சாகசம் செய்வதை காண்பதற்கு அதிக அளவில் சர்க்கஸ் நிகழ்ச்சி காண பொதுமக்கள் ஆவலுடன் வருவர் . தற்போதைய காலகட்டத்தில் விலங்குகளை சர்க்கஸ் நிகழ்ச்சியில் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளதால் , மக்களுக்கு சர்க்கஸ் கலையின் மீதான ஆர்வம் குறைந்ததாக கூறுகின்றனர்.
நூறுக்கும் மேற்பட்ட சர்க்கஸ் நிறுவனங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது விரல் விட்டு என்னும் நிலையிலேயே சர்க்கஸ் நிறுவனங்கள் இயங்கி வருகிறது .
இந்த சூழலில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின்பு தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. தேனியில் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு எவ்வாறு உள்ளது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களும் கால நிலைகளுக்கு ஏற்ப ஊர்களை தேர்ந்தெடுத்து சர்க்கஸ் கூடாரங்கள் அமைத்து கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சர்க்கஸ் தொழில் ஈடுபட்டு வருகின்றனர் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவனம் . தினசரி மூன்று காட்சிகளாக மனித சாகசங்கள் மூலமும் விலங்குகள் மூலமும் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்தரத்தில் பறக்கும் பெண் 50 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள கம்பியில் சாகசம் செய்யும் நிகழ்ச்சி, சிறிய சைக்கிளில் நடத்தப்படும் நிகழ்ச்சி, ஆபத்தான முறையில் விளையாடும் பல நிகழ்ச்சிகள், ஆபத்தான முறையில் கத்தியில் நடக்கும் சர்க்கஸ் கலைஞர்கள், கண்ணைக் கட்டிக் கொண்டு துப்பாக்கியால் பலூனை சுடுதல் , உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் தலைகீழாக நடக்கும் ஸ்கைவாக், பிடிமானம் எதுவுமில்லாமல் அந்தரத்தில் தொங்கும் பேலன்சிங் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கௌரவையில் சுமார் இரண்டே கால் மணி நேரமாக இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 100, 150, 200 வகைகளில் கட்டணம் செய்யப்பட்டுள்ளது .
இதுகுறித்து தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் மேலாளர் கூறுகையில், "கொரோனா காலகட்டத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்ட சர்க்கஸ் தொழில் தற்போதைய சூழலில் பார்ப்பதற்கு மக்கள் வருகின்றனர் எனவும் , ஆனால் சர்க்கஸ் கலையின் மீது முன் இருந்த ஆர்வம் பொதுமக்களுக்கு இல்லை எனவும் சர்க்கஸ் கலைஞர்கள் கூறுகின்றனர். சர்க்கஸ் கலை தொடர்ந்து நடைபெற்று வருவதால் 160 க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்களை வைத்து இயங்கி வந்த அந்த கிரேட் இந்தியன்ஸ் சர்க்கஸில் தற்போது 88 சர்க்கஸ் கலைஞர்கள் மட்டுமே முதலாக கூறுகின்றனர். அடுத்த தலைமுறையினர் சர்க்கஸ் தொழில் ஈடுபடுவார்களா என்பது சந்தேகம் எனவும் கூறுகின்றனர்.
சர்க்கஸ் கலைஞர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். விலங்குகளை சர்க்கஸ் நிகழ்ச்சியில் பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் எனவும், சர்க்கஸ் கலையை ஊக்கப்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் சர்க்கஸ் கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Circus, Local News, Theni