ஹோம் /தேனி /

களிமண் விநாயகர் சிலைகளுக்கு வரவேற்பு குறைவு - ஏக்கத்தில் தொழிலாளர்கள்..

களிமண் விநாயகர் சிலைகளுக்கு வரவேற்பு குறைவு - ஏக்கத்தில் தொழிலாளர்கள்..

விநாயகர்

விநாயகர் சிலைகள், சின்னமனூர்

Vinayakar Chadurthi : தேனி மாவட்டம் சின்னமனூரில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்படும் களிமண் விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்களிடம் ஆர்வம் காட்டவில்லை என கவலை தெரிவிக்கின்றனர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில்  விநாயகர் சிலைகளை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் குறிப்பாக சின்னமனூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் , இப்பகுதியில் விநாயகர் சிலை தயார் செய்யும் பணிகள் நடைபெறும்.

கடந்த  2  ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறாத சூழ்நிலையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொண்டாடுவதற்காக களிமண்ணால் ஆன சிலைகள் வடிவமைக்கும் பணி சின்னமனூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இருப்பினும், இந்தாண்டு எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் போதிய வரவேற்பின்றி விற்பனையாகாமல், தேக்கம் அடைந்துள்ளதால் சிலை வடிவமைப்பாளர்கள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

களிமண் விநாயகர் சிலைகள், சின்னமனூர்

அட்டைகளை பயன்படுத்தி எடை குறைந்த வகையில் தயாரிக்கப்படும்  விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால், களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்குவதற்கு பொதுமக்களிடம் ஆர்வம் இல்லை என தெரிவிக்கின்றனர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்..

களிமண் விநாயகர் சிலைகள், சின்னமனூர்

3 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் கூட அதையும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் இந்த ஆண்டு தயார் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் தேக்கமடைந்து உள்ளது.

களிமண் விநாயகர் சிலைகள், சின்னமனூர்

எளிதில் கரையக்கூடிய மற்றும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத களிமண்ணால் செய்யக்கூடிய விநாயகர் சிலைகளை வாங்கி பயன் படுத்த பொதுமக்களுக்கு அரசு பரிந்துரை செய்தால் தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்கின்றனர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

களிமண் மூலம் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகளை வாங்க விரும்புபவர்கள்  97889 42141 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

Published by:Arun
First published:

Tags: Local News, Theni