தமிழ் சினிமால தனக்குனு மிகப் பெரிய ரசிகரைக் கொண்டுள்ள மாஸ் ஹீரோ அஜித்துக்கு இன்று பிறந்த நாள்.. அஜித் ரசிகர்களுக்கு அவரோட பிறந்த நாளுன்றது ஒரு திருவிழா மாதிரி தான். உலகம் முழுவதும் அஜித்தின் பிறந்த நாளை மாஸா செலிபிரேட் பண்ணிட்டு வராங்க ஏகே ஃபேன்ஸ்..
அந்த வகையில் அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடுற விதமா தீவிர அஜித் ரசிகர் ஒருவர் அவர் நடத்தி வரும் உணவகத்தில் பிரியாணி உட்பட எந்த உணவு வேணா சாப்பிடலாம். அதுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் என்று அட்டகாசமான ஆஃபர் அறிவித்திருந்தார். அதன்படி விற்பனை செய்துட்டு இருக்காரு.. மத்த நாட்கள்ல 120 ரூபாய் விலை கொண்ட சிக்கன் பிரியாணியை அஜித் பிறந்த நாளுக்காக ஒரு ரூபாய்க்கு கொடுத்துள்ளார். இது ஏதோ 100, 200 பேருக்குனு ஒரு சம்பிரதாயத்துக்கு இல்லங்க, ஒரு ரூபாய் விலைக்கு சிக்கன் பிரியாணிய 5,200 பேருக்கு கொடுத்துள்ளார் அவர்.
யாரு சாமி நீ, நீ எங்க இருக்கனு உங்க மைண்ட் வாய்ஸ் பேசுற சத்தம் எங்களுக்கு நல்லாவே கேக்குது.. அஜித் மேல இந்த அளவுக்கு இவருக்கு அன்பு ஏற்பட காரணம் என்ன? வாங்க பார்க்கலாம்...
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். அஜித் நடித்த ‘வீரம்’ படத்தோட டைட்டில தான் தன்னோட ஹோட்டலுக்கே பெயரா வச்சிருக்காரு இந்த தீவிர அஜித் ரசிகர்.. சின்னமனூரில் இருந்து மேகமலை செல்லும் வழியில் இவரோட முதல் ஓட்டல் அமைஞ்சிருக்கு.. இன்னோரு கிளை சின்னமனூர் ஊருக்குள்ளவே இருக்கு.. இவரோட ஓட்டல்ல அஜித்துக்கு சிலையே வச்சிருக்காருங்க.. அஜித்தை கடவுள் போல பார்த்து வரும் வீரம் ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் காளிதாஸ், அஜித்தின் பிறந்த நாளுக்காக தனது ஓட்டலில் எந்த உணவு சாப்பிட்டாலும் ஒரு ரூபாய் மட்டும் தான் விலை என அறிவிப்பு வெளியிட்டிருந்தாரு..
அதன்படி மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளையொட்டி இவரின் ஓட்டலில் டீ, வடை, பரோட்டா, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சாப்பாடுனு எல்லா வகையான உணவுகளுக்குமே விலை ஒரு ரூபாய் தான்.. இலவசம்னவுடனே அளவை குறைச்சிருப்பாரு யோசிக்காதீங்க.. நார்மல் நாட்கள்ல என்ன அளவு தரத்துல இருக்குமோ அதுல எந்த மாற்றமும் இல்லாமதான் இந்த ஒரு ரூபாய்க்கு காளிதாஸ் உணவு வழங்கியிருக்காரு.. அஜித் போன்ற தோற்றமுள்ள அஜித் ராஜா என்ற நபரை வரவழைத்து அவர் முன்னிலையில் ஒரு ரூபாய்க்கு உணவு பொருட்களை வழங்கினார் தீவிர அஜித் ரசிகரான காளிதாஸ்.
இது தவிர மே1-ல் பிறந்த அனைவருக்கும் இலவசமாக பிறந்தநாள் கேக் வழங்கி இருக்காரு. சிறுவர் சிறுமிகளுக்கு நோட்டு புத்தகம் , விதைப் பந்து போன்றவற்றையும் இவர் இலவசமாக கொடுத்துருக்காரு. இதுமட்டுமல்லாம ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 52 பேருக்கு இன்று 3 வேளையும் அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று இலவச உணவு கொடுக்குறாரு காளிதாஸ்.
ஒரு ரூபாய்க்கு உணவு என்ற அறிவிப்பின் காரணமாக பொதுமக்கள் காலை முதலே அதிக அளவில் இவரின் கடையில் வந்து உணவுகளை சாப்பிட்டும் பார்சல் வாங்கிட்டும் போறாங்க..
அஜித்தின் 61-வது திரைப்படமான துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது தன்னுடைய வீரம் உணவகத்தில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு குலுக்கல் பரிசு போட்டி நடத்தி ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பைக், எல்இடி டிவி, சைக்கிள் , வாஷிங் மெஷின், வெட் கிரைண்டர், மிக்ஸி, குக்கர், சோபா செட், உள்ளிட்ட 61 பொருட்கள் பரிசு தொகையாக வழங்கி ஏற்கனவே பிரம்மிக்க வச்சவருங்க இந்த வீரம் காளிதாஸ்..
அதுமட்டுமல்லாமல் அஜித் நடித்த 61 திரைப்படத்தின் பெயர்களையும் எழுதியும் அவரின் புகைப்படத்தை ஒட்டி ஆல்பம் ஆக தயாரித்து வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி 60 ரூபாய்க்கும் வழங்கினார்.
தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் மீதும் அண்ணாமலைக்கு அக்கறை இல்லை... இயக்குநர் அமீர் விமர்சனம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajith, Local News, Theni