Home /theni /

ஒரே நேரத்தில் குவிந்த பீட்ரூட் - கலக்கத்தில் பாளையம், சின்னமனூர் பகுதி விவசாயிகள்..

ஒரே நேரத்தில் குவிந்த பீட்ரூட் - கலக்கத்தில் பாளையம், சின்னமனூர் பகுதி விவசாயிகள்..

தேனி

தேனி - பீட்ரூட் விவசாயம்

Theni Beetroot Farming | தேனி மாவட்டம் புலிகுத்தி சுற்றுவட்டார பகுதிகளில் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகப்படியான பீட்ரூட் வரத்து இருப்பதால் போதிய விலை கிடைக்கவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகிலுள்ள மார்க்கையன்கோட்டை சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளில் மிளகாய், சீனி அவரைக்காய், அவரைக்காய் , தக்காளி உள்ளிட்ட காய்கறி விவசாயத்தை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்ரூட் விலை அதிகமாக இருந்ததால்  இப்பகுதி விவசாயிகள்  அதிகளவில் பீட்ரூட் பயிரிட தொடங்கினர்.

குறிப்பாக சின்னமனூர் பகுதியை சுற்றியுள்ள கன்னிசேர்வைபட்டி, சின்ராமகவுண்டன்பட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம், முத்தலாபுரம், அய்யம்பட்டி, புலிக்குத்தி, தர்மத்துப்பட்டி, சிந்தலச்சேரி, சங்கராபுரம், குச்சனூர், பொட்டிப்புரம், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, அய்யனார்புரம், அப்பிபட்டி, ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நாட்டு பீட்ரூட் மற்றும் தனியார் ரக பீட்ரூட் விதைகளைக் கொண்டு பீட்ரூட் சாகுபடியை செய்து வருகின்றனர்.

தேனி - பீட்ரூட் விவசாயம்


பீட்ரூட் விலை அதிகரித்து இருந்த நேரத்தில், 70 நாட்களில் அறுவடைக்கு வரும் குறுகிய கால பயிரான பீட்ரூட் சாகுபடி செய்தால் லாபம் பெறலாம் என்ற நோக்கில் சின்னமனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் பிட்ரூட் விவசாயம் செய்தனர்.

ஒரே நேரத்தில் அதிகப்படியான விவசாயிகள் பீட்ரூட் சாகுபடி செய்ததன் காரணமாக பீட் ரூட்டின் வரத்து அதிகமானது. இதன் காரணமாக பீட்ரூட்டின் விலை சரிந்து வருகிறது. விவசாயிகளிடமிருந்து 60 கிலோ எடை கொண்ட பீட்ரூட் மூட்டை 650 முதல் 700 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தேனி - பீட்ரூட் விவசாயம்


வாரச் சந்தைகளில் பீட்ரூட்டின் விலை தற்போது 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது . பீட்ரூட்டின் விலை கிலோவிற்கு 25 ரூபாய் என்ற அளவில் விற்பனையானால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் இருக்கும் எனவும் மகசூல் இருந்தும் விலையில்லாமல் இருப்பது கவலை அளிக்கிறது என்கின்றனர் பீட்ரூட் விவசாயிகள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி