தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் விரும்பி பருகக்கூடிய 5 ரூபாய் மதிப்புள்ள ஃபிளேவர் கூல்டிரிங்ஸை செந்தில்வேல் என்பவர் தயாரித்து விற்பனை செய்யத்தொடங்கியுள்ளார். இவர் தயாரித்து விற்பனை செய்த ஜூஸ் சந்தையில் அதிக அளவு விற்பனை ஆனதை தொடர்ந்து, மத்திய அரசின் PMEGP திட்டத்தில் கடனுதவி பெற்று ஃபிளேவர் கூல்டிரிங்ஸ் தயாரிக்கும் தொழிலை தொழிற்சாலையாக விரிவுபடுத்த முயற்சி எடுத்துள்ளார்.
இந்நிலையில், PMEGP திட்டத்தில் பெறப்பட்ட கடன் தொகையை வைத்து 6 சென்ட் பரப்பளவில் 15 லட்ச ரூபாய் முதலீட்டில் நவீன கூல் ட்ரிங்க்ஸ் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி தொழிற்சாலையாக உருவாக்கியுள்ளார். அதன் மூலம் ஆரஞ்சு, மேங்கோ, கிரேப்ஸ், பிளாக் பிளம்ப் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வகைகளான 5 ரூபாய் மதிப்புள்ள ஜூஸ் தயாரித்து தென் மாவட்டங்கள் முழுவதும் ஏற்றமதி செய்து வருகிறார்.
தனியார் ஜூஸ் கம்பெனியில் வேலை செய்த அனுபவத்தை வைத்து சொந்தமாக தொழில் தொடங்கி , சிறுவர்களை கவரக்கூடிய சுவையான கூல்ட்ரிங்க்ஸ் களை தயார் செய்து மதுரை, திண்டுக்கல், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார் செந்தில்வேல். நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 பாக்ஸ் வரை ஏற்றுமதி ஆவதாகவும், இதன் மூலம் மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாகவும் கூறுகிறார் செந்தில்வேல்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Money18, Theni