ஹோம் /தேனி /

சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொட்டிபுரம் கிராமத்தினர்..

சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொட்டிபுரம் கிராமத்தினர்..

பொட்டிபுரம்

பொட்டிபுரம் மக்கள்

Theni Pottipuram Village | தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் ஊராட்சியில் அடிப்படைகள் வசதிகள் செய்து தரவில்லை என புகார் கூறி சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, ஊராட்சி மன்ற துணை தலைவர், பொதுமக்களுடன் சேர்ந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிபுரம் ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்த பணிகள் ஏதும் நடைபெறாததால் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் கூறியும் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரியும், பொட்டிபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு தெரிவிக்காமல் அனைத்து அலுவலக பணிகளையும் ஊராட்சி மன்ற தலைவரை மேற்கொண்டு வருவதாகவும் கூறி, பொட்டிபுரம் ஊராட்சி துணைத்தலைவர் ஜெயந்தி சிவகுமார் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வதற்கு ஊராட்சி மன்ற தலைவரை அணுகும் போதோ அல்லது அரசு அதிகாரிகளை அணுகும் போதோ அவர்கள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் ஊராட்சி மன்ற துணைத் தலைவரை தட்டிக் கழிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா? 

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை :-

பொட்டிபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரான ஜெயந்தி சிவகுமார் பொட்டிபுரம் ஊராட்சி பகுதியில் தெருவிளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யக்கோரி பலமுறை முறையிட்ட போதும் ஊராட்சி மன்ற தலைவரும் , வட்டார வளர்ச்சி அலுவலரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பொட்டிபுரம் கிராம மக்களுடன் சேர்ந்து சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் .

உடனடியாக தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பாரத மணி சின்னமனூர் பொறுப்பு காவல் ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

இது குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கூறுகையில், \" நான் படிக்காத துணை தலைவராக இருப்பதால் உங்களுக்கு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தகவல் தெரிவிக்க முடியாது என கூறி வட்டார வளர்ச்சி அலுவலரும் ஊராட்சி மன்ற தலைவரும் புறக்கணித்து வருகின்றனர் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக் கோரி மக்கள் என்னிடம் கூறும்போது அதனை நிறைவேற்ற முடியாத நிலையில் நான் உள்ளேன். எந்த ஒரு டெண்டர் பணிகளையும் என்னிடம் தெரிவிப்பது இல்லை . எந்த ஒரு அணுவல் பணிகள் குறித்தும் என்னிடம் தெரிவிக்காமல் ஊராட்சி மன்ற தலைவரே அனைத்து பணிகளையும் செய்து கொள்கிறார் . மக்களின் அடிப்படை வளர்ச்சி பணிகளுக்கு புகார் மூலமாக மனு அளித்தாலும் எந்தவித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப் படுவதில்லை என கூறினார் .

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Published by:Arun
First published:

Tags: Local News, Theni