தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது பூசாரி கவுண்டன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கை கால் முறிவுக்கு நாட்டுக்கட்டு முறையில் பாரம்பரியமாக வைத்தியம் செய்து வருகின்றனர். பூசாரி கவுண்டன்பட்டி கிராமத்தில் திரும்பும் திசையெல்லாம் நாட்டுக்கட்டு வைத்தியசாலை இருக்கும் நிலையில், இங்கு சிகிச்சை பெறுவதற்காக உள் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்ட மக்களும் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநில மக்களும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வைத்திய சாலையில் கை, கால் முறிவு, எலும்பு முறிவு , இடுப்பு எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பூசாரி கவுண்டன்பட்டி (எ) சின்ன ஓவுலாபுரம்..
இங்கு அனைத்து விதமான எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றாலும் எலும்பு சம்பந்தமான 90 சதவீத பிரச்சினைகளுக்கு இங்கே தீர்வு அளிக்கப்படுகிறது. பூசாரி கவுண்டன்பட்டி கிராமத்தில் எண்ணற்ற நாட்டுக்கட்டு வைத்தியசாலை இருந்தாலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்கட்டு முறையில் சிகிச்சை அளித்து நாட்டுக்கட்டு வைத்திய முறையில் புகழ்பெற்று விளங்கி வருகிறது சுருளியப்பன் நாட்டுக்கட்டு வைத்தியசாலை.

சுருளியப்பன் நாட்டுக்கட்டு வைத்தியசாலை.
இங்கு கை கால் முறிவு, இடுப்பு எலும்பு முறிவு, மணிக்கட்டு முறிவு, கழுத்து எலும்பு முறிவு, உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பாரம்பரிய முறைப்படி கைகளாலேயே வைத்தியம் செய்யப்பட்டு எலும்பு உடைந்த இடத்தில் சுருளியப்பன் வைத்தியசாலையில் விற்கப்படும் பிரத்யேக எண்ணெயால் கட்டு கட்டப்பட்டு வைத்தியம் செய்யப் படுகிறது.

சுருளியப்பன் நாட்டுக்கட்டு வைத்தியசாலை.
இங்கு அளிக்கப்படும் சிகிச்சை பெரும்பாலும் குணம் அடைவதால், தேனி மாவட்டம் மட்டுமல்லாது கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற பூசாரி கவுண்டன்பட்டி கிராமத்தை பொதுமக்கள் நாடி வருகின்றனர். இங்கு அதிகாலை முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. எலும்பு முறிவுக்கு ஏற்ப இங்கு 50 ரூபாய் முதல் சிகிச்சைக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுருளியப்பன் நாட்டுக்கட்டு வைத்தியசாலை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை பெறுவதை காட்டிலும் தமிழ் முறைப்படி நாட்டுக் கட்டு முறையில் சிகிச்சை பெறுவதால் உடனடி தீர்வு கிடைப்பதாகவும், நேரம் வீண் அடிக்கப்படுவது குறைவதாகவும், குறைந்த செலவிலேயே சிகிச்சை பெறப்படுவதால் நாட்டுக்கட்டு சிகிச்சை முறையில் சிகிச்சை பெற ஆர்வம் காட்டுவதாக இங்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்கள் கூறுகின்றனர்.
நாட்டுக்கட்டு குறித்த சந்தேகங்களுக்கு சுருளியப்பன் வைத்தியசாலையை 7012704441 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.