ஹோம் /Theni /

Theni : 3 மகள்களையும் சாதனையாளர்களாக மாற்றத் துடிக்கும் சிங்கப் பெண்... வறுமையின் நடுவே ஒரு போராட்டம்..!

Theni : 3 மகள்களையும் சாதனையாளர்களாக மாற்றத் துடிக்கும் சிங்கப் பெண்... வறுமையின் நடுவே ஒரு போராட்டம்..!

தேனி

தேனி - சின்னமனூரை சேர்ந்த சகோதரிகள்

Theni District : தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த தம்பதியர் வறுமையின் நடுவே தங்களின் 3 மகள்களையும் தடகளம், பேச்சுப் போட்டி, ஓவியம் என பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்க வைத்துள்ளனர். விளையாட்டுத்துறையில் சாதிக்க குடும்ப சூழல் தடையாக இருப்பதால் அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது சாதிக் அலி- சையது ராபியா தம்பதியினர். இவர்கள் சின்னமனூர் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக பழக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு முகைதீன் நவ்பின் பாத்திமா, சஃபிரின் , அல் பத்தாகு மர்ஜூகா என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். முகைதீன் நவ்பின் பாத்திமா கல்லூரி இரண்டாம் ஆண்டும், சஃபிரின் பன்னிரண்டாம் வகுப்பும், அல் பத்தாகு மர்ஜூகா 8 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த மூவரும் யோகா, தடகளம், கராத்தே, ஸ்கேட்டிங், த்ரோபால், பேச்சுப்போட்டி, குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில் பங்கு பெற்று நூற்றுக்கணக்கான பரிசுகளையும் கேடயங்களையும் வென்றுள்ளனர்.

  ஆரம்ப காலத்தில் தனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதால், சமூக மற்றும் உறவினர்களின் உதவி இன்றி மிகவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்துள்ளனர் முகமது சாதிக் அலி- சையது ராபியா தம்பதியினர்.

  இவர்கள் சின்னமனூர் பகுதியில் வடை கடை ஒன்றை தொடங்கி தனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதை கேலி செய்த சமூகத்தை எதிர்த்து தனது மூன்று பெண் குழந்தைகளையும் சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

  சாதனையாளர்கள் :-

  வடை கடை தொடங்கி அதில் போதிய வருவாய் இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளாக பழக்கடை நடத்தி வருகின்றனர். பழக்கடை இருந்து தங்களுக்கு கிடைக்கும் 200 வருவாயில் இருந்து தனது மூன்று பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து பல்வேறு போட்டிகளிலும் பங்கு பெற வைத்து குழந்தைகளுக்கு ஊக்கம் அளித்து அவர்களை சாதனையாளர்களாக மாற்றியுள்ளனர் முகமது சாதிக் அலி- சையது ராபியா தம்பதியினர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  தங்களுக்கு கிடைத்த குறைந்த பட்ச வருவாயில் இருந்து குடும்பத்தை நடத்தி தங்களை கேலி செய்த சமூகத்திற்கு இடையில் மூன்று பெண் குழந்தைகளையும் சாதனையாளர்களாக மாற்றியுள்ள முகமது சாதிக் அலி- சையது ராபியா தம்பதியினர்.

  வாங்கிக் குவித்துள்ள பதக்கங்கள்..

  குழந்தைகள் மேலும் மேலும் சாதனை படைத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழி தெரியாமல் தடுமாறி கொண்டு உள்ளனர் . கொரோனா காலகட்டத்தில் மிகவும் பாதிப்படைந்த இவர்களது தொழில் தற்போது வரை மீண்டெளமல் உள்ளது.

  3 சகோதரிகளும் வாங்கிக் குவித்துள்ள சான்றிதழ்கள்..

  இவர்களது மூத்த பிள்ளையான முகைதீன் நவ்பின் பாத்திமா பல் துறைகளில் சிறந்து விளங்கியுள்ளார். கராத்தே போட்டியில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். குறிப்பாக தடகளப் போட்டியில் மாவட்ட அளவில் சென்று பரிசினை வென்றுள்ள நிலையில், மாநில மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க கூடுதல் பயிற்சி தேவை என்பதால் போதிய நிதி வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார். ஒலிம்பிக்கில் சென்று தமிழகம் மற்றும் இந்தியாவிற்காக பெருமை சேர்க்க நினைக்கும் இந்த மூவரும் போதிய பொருளாதார வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு அரசு நிதி உதவியோ அல்லது விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்க இலவச பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்பையோ ஏற்படுத்தித் தரவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

  செய்தியாளர்: சுதர்ஸன்

  Published by:Arun
  First published:

  Tags: Local News, Theni