Home /theni /

பெண்கள் இனி தொழில் முனைவோர்களாவது சுலபம்... தேனியில் வந்தாச்சு பயிற்சி மையம்.. கடனுதவிக்கும் ஏற்பாடு..

பெண்கள் இனி தொழில் முனைவோர்களாவது சுலபம்... தேனியில் வந்தாச்சு பயிற்சி மையம்.. கடனுதவிக்கும் ஏற்பாடு..

தேனி

தேனி மாவட்டம்

Theni Women Entrepreneurship Centre : சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் பெண் தொழில்முனைவோர் உற்பத்தி மற்றும் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பெண்களுக்கு பயிற்சி அளித்து, தொழில் தொடங்குவதற்கு தேவையான கடன் உதவியும் அளிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • TopperLearning
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பெண்களின் உற்பத்தி மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி மையம்  சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்ற அமைச்சர் கீதாஜீவன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாய தொழிலே அதிக அளவில் செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் தங்களின் லாபத்தை இரட்டிப்பு ஆக்கவும், விளைவித்துள்ள விளைபொருள் நல்ல மகசூல் பெறவும், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுத் தருவதிலும் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் முக்கிய பங்காற்றி வருகிறது.

மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி மையம்..


அந்த வகையில் தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விளைவித்த பொருட்களை மட்டும் விற்பனை செய்து வருமானம் பெறாமல் விளைவித்த பொருளை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் தொழில் நுட்பங்கள் கற்பிக்கும் பயிற்சி மையம், சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண் விவசாயிகளுக்கென்று இந்த மையம் தொடங்கப்பட்டு பெண் விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்றும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ளது.

மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி மையம்..


இங்கு தேன், மா, வாழை, திராட்சை போன்ற பல்வேறு பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்களின் மூலம் பெண்களுக்கு எவ்வாறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது என்று உரிய வல்லுநர்களுடன் கற்றுத்தரப்பட உள்ளது.

மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி மையம்..


இங்கு தொழில் கற்கும் பெண்கள் குழுவாக இணைந்து தொழில் தொடங்க முன் வந்தால் அவர்களுக்கு தேவையான கடன் உதவியும் வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்து கடனுதவியும் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதற்கு பெண்கள் தயங்காமல், அவர்கள் உற்பத்தி செய்த பொருளை வெளிச்சந்தையில் மார்க்கெட்டிங் செய்வதற்கு முழு உதவியும் அளிக்கப்படுகிறது. இதனால் பெண்கள் முழு தொழில் முனைவர் ஆக மாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது பெண்களின் உற்பத்தி மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி மையம்.

மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி மையம்..


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பும் பெண்கள் பயிற்சி நடைபெறும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இங்கு அளிக்கப்படும் பயிற்சியில் 75 சதவீதம் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் உள்ளது எனவும், சில குறிப்பிட்ட பயிற்சிக்கு மட்டும் அதிகம் பணம் செலவழிக்கப்படுவதால் சில பயிற்சிகளுக்கு மட்டும் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் சேர்மன் பச்சைமால் தெரிவித்துள்ளனர்.

tதொழில் முனைவோர் பயிற்சி பெற அல்லது ஆலோசனைகள் பெற விரும்பும், தேனி மாவட்ட பெண்கள்,  தொழில் முனைவோர் பயிற்சி மையத்தை ( 04546) 247 245 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

Theni Entrepreneurship centre map
மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி மையம்..
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி