ஹோம் /தேனி /

Theni News : கிழங்கு மாவு மூலம் விநாயகர் சிலைகள் தயாரிப்பு.. சின்னமனூரில் விறுவிறு..

Theni News : கிழங்கு மாவு மூலம் விநாயகர் சிலைகள் தயாரிப்பு.. சின்னமனூரில் விறுவிறு..

தேனி

தேனி - சின்னமனூரில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி

Theni Latest News : தேனி மாவட்டம் சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விநாயகர் சதுர்த்தி நெருங்கிய நிலையில்,தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி நகர் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் வருடந் தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவினை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்..

விநாயகர் சதுர்த்தியில் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதுடன், தெருக்களில் மேடை போட்டு பந்தல் அமைத்து ஆளுயர விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 3 நாள் விழாவாக கொண்டாடி ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லை பெரியாறு ஆற்றில் கரைத்து விட்டு வழிபாட்டை நிறைவு செய்வதை வழக்கமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

சின்னமனூரில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி

இதனிடையே கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் நடைபெறாத சூழ்நிலையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொண்டாடுவதற்காக சிலைகள் வடிவமைக்கும் பணியில்  தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சின்னமனூரில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி

இந்த நிலையில் சின்னமனூர் பகுதியில் கடந்த 37 வருடங்களாக விநாயகர் சிலை விற்பனையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், நடப்பு ஆண்டில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் மும்மரம் காட்டி வருகின்றனர்.

சின்னமனூரில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி

விழுப்புரம் பகுதியில் இருந்து சிலைகளின் கை, கால், உடல் பாகங்கள் என தனித்தனியாக  சின்னமனூர் பகுதிக்கு கொண்டு வந்து, இங்கு அனைத்து பாகங்களையும் ஒன்றிணைத்து விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசி சிலையை விற்பனை செய்து வருகின்றனர். எளிதில் கரையக்கூடிய கிழங்கு மாவு மற்றும் அட்டையால் ஆன விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இங்கு 1,500 ரூபாய் முதல் விநாயகர் சிலை கிடைப்பதாக கூறுகின்றனர். விநாயகர் சிலைகள் பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 86681 05417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Chinnamanur

Published by:Arun
First published:

Tags: Local News, Theni