ஹோம் /தேனி /

வருசநாடு பழங்குடியின மக்களுக்கு இலவச தேன் பெட்டிகள் வழங்கல் - வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டும் சென்டெக் வேளாண் ஆராய்ச்சி மையம் 

வருசநாடு பழங்குடியின மக்களுக்கு இலவச தேன் பெட்டிகள் வழங்கல் - வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டும் சென்டெக் வேளாண் ஆராய்ச்சி மையம் 

சின்னமனூர்

சின்னமனூர்

Theni Chinnamanur | தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பழங்குடியின பொதுமக்களுக்கு பெட்டித்தேனீக்கள் மூலம் தேன் எடுக்கும் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் தேன் பெட்டிகள் வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் மதுரை மண்டல காதி கிராமம் தொழில் ஆணையம் மற்றும் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் இணைந்து தேனீ புரட்சி திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பொது மக்களுக்கு பெட்டி தேனீக்கள் வளர்ப்பதற்கான தேன் பெட்டிகள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பொதுமக்கள் மலைகளில் இருக்கும் மலைத்தேனீ கூட்டில் இருந்து தேன் எடுத்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் வனப்பகுதிக்குள் செல்வதற்கு வனத்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாலும் மலைத்தேனை எடுப்பதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாகவும் பழங்குடியின பொதுமக்கள் பெட்டி தேனீக்களை வளர்த்து அதன் மூலம் தேன் எடுத்து விற்பனை செய்யும் வகையில் பழங்குடியின பொதுமக்களுக்கு பெட்டி தேனீக்கள் வளர்க்கும் பெட்டிகள் மற்றும் தேன் எடுக்கும் கருவிகள் வழங்கப்பட்டது .

மேலும் படிக்க:  போடிமெட்டு சுற்றுலா... பைக், காரில் சென்றால் இயற்கை அழகில் முழுமையாக மூழ்கித் திளைக்கலாம்!

இதன் மூலம் வருசநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழங்குடியின பொதுமக்கள் பெட்டி தேனீக்கள் வளர்த்து அதன் மூலம் தேன் எடுத்து விற்பனை செய்யும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு எளிய முறையில் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தலாம் என சென்டெக் வேளாண் ஆராய்ச்சி மையம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட பழங்குடியின பொது மக்களுக்கு 200க்கும் மேற்பட்ட தேன் பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது . மேலும் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், தேன் புரட்சி திட்டம் குறித்தும் பழங்குடியின பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிகழ்வில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், சேர்மன் முனைவர் பச்சையம்மால், தொழில்நுட்ப வல்லுநர் ரம்யா சிவசெல்வி , காதி கிராம தொழில் ஆணையத்தின் மதுரை மண்டல அலுவலக பொறுப்பாளர் கலிபூர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்

Published by:Arun
First published:

Tags: Local News, Theni