Home /theni /

துல்லியமாக நீரோட்டத்தை கண்டறியும் காந்த கருவி உருவாக்கி தேனி விவசாயி அசத்தல்..

துல்லியமாக நீரோட்டத்தை கண்டறியும் காந்த கருவி உருவாக்கி தேனி விவசாயி அசத்தல்..

சுக்காங்கல்பட்டி

சுக்காங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன்

Theni District News | கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்க சரியான நீரோட்டம் உள்ள இடத்தை தேர்ந்தெடுப்பதற்கு பல்வேறு முறைகள் இருந்து வரும் நிலையில், தேனி மாவட்டம் சுக்காங்கல் பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் காந்த கருவியை கண்டுபிடித்து அதன் மூலம் நீரோட்டம் பார்த்து வருகிறார்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்றை மையப்படுத்தி பல்வேறு விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில்  மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களது நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போதைய சூழலில் ஆழ்துளை கிணறு அமைப்பது அடிப்படை தேவையாக அமைந்துவிட்டது. தண்ணீரின் தேவை அதிகரித்து இருப்பதால் கட்டடங்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்புகள் என அனைத்து இடங்களிலும் ( ஆழ்துணை கிணறு ) போர்வெல் மூலம் போர் அமைத்து அதன் மூலம் தண்ணீரின் தேவையை பூர்த்தி செய்கின்றனர் பொதுமக்கள்.

அதிக பணம் செலவில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பொழுது அதில் தோல்வியும் கிடைப்பது உண்டு. ஆழ்துளை அமைக்கும்பொழுது ஓரிடத்தை தேர்வு செய்து அதில் போர் போடும் பொழுது பல நூறு அடியை கடந்த பின்னரும் கூட தண்ணீர் கிடைக்காமல் போர் தோல்வியில் முடிவதுண்டு. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் பண இழப்பு ஏற்படும்.

இதன் காரணமாக போர் போடுவதற்கு முன்பாக எந்த இடத்தில் நீரோட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றது போல் ஆழ்துளை கிணற்றை அமைப்பர். அதற்கு பாரம்பரிய முறைப்படி தேங்காய், வேப்பங்குச்சி ஆகியவற்றைகளைக் கொண்டும் நிலவியல் வல்லுநர்கள் மூலம் நவீன இயந்திரங்களைக் கொண்டும் நீரோட்டம் பார்ப்பது வழக்கம்.

தேனி விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு..


கட்டுமான பணிகளில் நீரோட்டம் பார்ப்பது ஒரு முக்கிய நிகழ்வாகவே உள்ளது இதற்காக உள்ளூரில் நீரோட்டம் பார்க்கும் நபர்களை அழைத்து நீரோட்டம் பார்த்த பிறகு தான் ஆழ்துளை கிணறு அமைக்க முன் வருகின்றனர்.

சின்னமனூர் சுக்காங்கல்பட்டி  விவசாயி:

இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் கடந்த பல ஆண்டுகளாக நீரோட்டம் பார்க்கும் தொழிலை செய்து வருகிறார். விவசாயம் செய்து வந்த இவர் நீரோட்டம் பார்ப்பதில் சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வல்லுநராக திகழ்ந்ததால் முழு நேரமாக நீரோட்டம் பார்க்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.

தேனி விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு..


ஆரம்பத்தில் தேங்காய், வேப்பங்குச்சி மூலம் நீரோட்டம் பார்த்து வந்துள்ளா.ர் அதில் சில தோல்விகளும் ஏற்பட்டு இருந்ததால் , நீரோட்டத்தை முழுமையாக கண்டுபிடிப்பதற்கு என்ன வழி என்பதை ஆராய தொடங்கியுள்ளார். தோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஒரு நோட்டில் குறிப்பாக குறித்து வைத்து தொடர்ந்து 100% சரியான நீரோட்டத்தை காண்பதற்கு முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

தேனி விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு..


அதன் பின் காந்தங்களை கொண்டு நீரோட்டம் பார்ப்பதற்கான ஒரு சிறிய கருவி அவராகவே கண்டுபிடித்து அதன் மூலம் நீரோட்டத்தை பார்த்து வருகிறார். காந்த விசையின் மூலம் நீரோட்டத்தை பார்ப்பதால் 100% நீரோட்டத்தை கண்டுபிடிக்க முடியும் என்கிறார் கன்னியப்பன். இந்த காந்தக் கருவியின் மூலம் பல ஆழ்துழை கிணறுகள் 100% வெற்றி அடைந்துள்ளது எனவும் குறிப்பிடுகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நீரோட்டம் பார்க்கும் காந்த கருவி மற்றும் நீரோட்டம் பார்க்கும் முறை பற்றி தெரிந்துகொள்ள, கன்னியப்பனை 98438 40538 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி