Home /theni /

Theni | சின்னமனூரில் தொடர் மழை: வெற்றிலையில் நோய் தாக்கத்தால் விவசாயிகள் வேதனை 

Theni | சின்னமனூரில் தொடர் மழை: வெற்றிலையில் நோய் தாக்கத்தால் விவசாயிகள் வேதனை 

மாதிரிப்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் செய்து வந்த வெற்றிலை சாகுபடியில் நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செய்து வந்த வெற்றிலை சாகுபடியில் நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

    வெற்றிலை விவசாயம்

    தேனி மாவட்டத்தில் பெரியகுளத்திற்கு அடுத்தபடியாக சின்னமனூர் பகுதியில் அதிகளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வந்த நிலையில் தற்போது சின்னமனூர் சுற்று வட்டாரப் பகுதிகளை உள்ளடக்கி சுமார் 30 ஏக்கரில் மட்டுமே வெற்றிலை விவசாயம் நடைபெறுவதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

    தொடர் நோய் தாக்குதல், விலை குறைவு மற்றும் விவசாயிகளின் ஆர்வம் இன்மை ஆகிய காரணங்களால் சின்னமனூர் பகுதிகளில் பயிரிடப்படும் வெற்றிலை பரப்பளவு படிப்படியாக குறைந்து வருவதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சின்னமனூர் பகுதிகளில் செய்யப்படும் வெற்றிலை சாகுபடியில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக வெற்றிலை பழுப்பு நிறத்தில் காணப்படுவதோடு, புள்ளி நோய், பூச்சித்தாக்குதல் ஏற்பட்டு வெற்றிலைக்கொடி அழகி வருவதால் விவசாயிகள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    மேலும் வெற்றிலை கொடிகளில் சுருட்டு நோய் தாக்குவதால் ஐந்தாண்டு இருக்கக்கூடிய வெற்றிலைக்கொடி தற்போது ஓராண்டு மட்டுமே நீடிப்பதாக கூறுகின்றனர். கிலோ 200 ரூபாய்க்கு விற்ற வெற்றிலை தற்போது 150 முதல் 180 ரூபாய் வரை மட்டுமே விற்பதாக கூறுகின்றனர்.

    வெற்றிலை விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இப்பகுதியில் வெற்றிலை விவசாயத்தை விட்டு விட்டு, விவசாயிகள் வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்வதாக வேதணை தெரிவிக்கின்றனர்.

    மேலும், வெற்றிலை கொடியில் தாக்கும் சுருட்டை நோயிலிருந்து கொடிகளை பாதுகாப்பது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் எந்த விளக்கமும், உதவியும் செய்யவில்லை என்கின்றனர்.

    சின்னமனூர் பகுதி வெற்றிலை விவசாயிகள், வெற்றிலையை பயிர் காப்பீட்டில் இணைக்க வேண்டும் எனவும், வேளாண்துறை அதிகாரிகள் முறையாக தோட்டத்தை பார்வையிட்டு நோயிலிருந்து செடிகளை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு வெற்றிலை விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்கவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி