முகப்பு /தேனி /

சின்னமனூர் எரசக்கநாயக்கனூரில் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி..! கலெக்டர், எம்எல்ஏ துவக்கி வைத்தனர்..!

சின்னமனூர் எரசக்கநாயக்கனூரில் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி..! கலெக்டர், எம்எல்ஏ துவக்கி வைத்தனர்..!

X
எரசக்கநாயக்கனூரில்

எரசக்கநாயக்கனூரில் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி

Chinnamanur : தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியினை தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர். 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியினை தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி (offline) வாயிலாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியினையும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எரசக்கநாயக்கனூரில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜீவனா கம்பம், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எரசக்கநாயக்கனூரில் மதுரை கோட்டம் தாட்கோ சார்பில் ரூபாய் 142. 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியினை குத்து விளக்கு ஏற்றி வைத்து, பார்வையிட்டார்.

எரசக்கநாயக்கனூரில் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி

இதையும் படிங்க : ஐ.டியில் பணிப்புரிந்து கொண்டே இயற்கை விவசாயம் செய்து அசத்தும் தென்காசி இளைஞர்!

மேலும் இந்நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஊராட்சி மன்ற ஒன்றியக் குழு தலைவர் நிவேதா, எரசக்கநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Theni