Home /theni /

தேனி மாவட்ட பெண்களை எச்சரிக்கும் மருத்துவர்.. கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்பட காரணம் என்ன?

தேனி மாவட்ட பெண்களை எச்சரிக்கும் மருத்துவர்.. கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்பட காரணம் என்ன?

தேனி

தேனி

Cervical Cancer Cases increases in Theni District : கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் அதிகமாக குழந்தை திருமணம் நடைபெற்றதால், குழந்தை திருமணம் செய்து கொண்டவர்கள் 50 வயதை கடக்கும் பொழுது கருப்பை வாய் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை நாடுவதால் கருப்பை வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்கிறார் அரசு மருத்துவர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni | Tamil Nadu
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் , தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாவட்டத்தில் கேன்சர் (புற்றுநோய்), பாதித்தவர்கள், சிகிச்சைக்காக பெரும்பாலும் மதுரைசென்னை என பெரு நகரங்களுக்கு செல்வார்கள். இதில் பண இழப்பு ஒரு பக்கம் என்றால், மனரீதியாக தங்களது நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர். கேன்சர் நோயாளிகளுக்கு, நம்பிக்கை மையமாக, முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு, திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில்  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உடலில் அனைத்து பாகங்களிலும் ஏற்படக்கூடிய புற்று நோயானது
உடல் பருமன், அதிகப்படியான மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைகள் ஆகியவைகளால் ஏற்படலாம் .

கருப்பை வாய் புற்றுநோய் :-

தேனி மாவட்டத்திலேயே புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் , தேனி மாவட்ட மக்கள் புற்றுநோய் பாதிப்புக்கு மாவட்ட அரசு மருத்துவமனையை நாடி  வருகின்றனர் . அவ்வாறு  புற்று நோய்  சிகிச்சைக்கு வருபவர்களில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் தான் அதிகமாக காணப்படுகின்றனர்.

அரசு மருத்துவமனை, கம்பம்


பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், கருப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவிற்கு இல்லை.

கருப்பை வாய் புற்றுநோய் காரணங்கள்:

சிறு வயது திருமணம் , தகாத உறவு முறை , சிறு வயது பாலியல் உறவு  உள்ளிட்ட காரணங்களால் பெண்களுக்கு பொதுவாக 45 வயதிற்கு மேல் கருப்பை வாய் புற்றுநோய் உண்டாகிறது . கருப்பை வாய் புற்றுநோய் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டால் முற்றிலும் குணப்படுத்தக் கூடியது எனவும், தேனி மாவட்டத்தில் ஆரம்ப காலகட்டத்தில் குழந்தை திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் என்பதால் அவர்கள் 45 முதல் 50 வயதை அடையும் பொழுது கருப்பை வாய் புற்றுநோயால் அவதிப்படுகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

கருப்பை வாய் புற்றுநோய் காரணங்கள்


இதனால் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவை என்கிறார் தேனி மாவட்ட புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசு மருத்துவரான பாரதி.

மருத்துவர் விளக்கம் :-

இதுகுறித்து அரசு மருத்துவரான பாரதி கூறுகையில் , " தற்போதைய காலகட்டத்தில் புற்றுநோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. டிஎன்ஏ பாதிப்பு மற்றும் மரபணு மாற்றங்கள், ஆகியவைகளால் புற்றுநோய் உண்டாகிறது.

மருத்துவர்  பாரதி


கர்ப்பப்பை வேறு, கருப்பை வாய் வேறு. கர்ப்பப்பை வளர வளர கர்ப்பப்பை வாய் உள்நோக்கி நகரும். இதைத்தான் நாம் பருவமடைதல் ( மெச்சூரிட்டி) என்கிறோம் . முழுமையாக கர்ப்பப்பை உள்நோக்கி நகர்வதற்கு முன்பாகவே எந்த ஒரு பெண் உடலுறவில் ஈடுபடுகிறாளோ, அவளுக்கு கருப்பை வாய்ப்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுவயதிலேயே உடலுறவில் ஈடுபடும்போது இளமையான கருப்பை வாயில் அடிபடும் பொழுது அது பின்னாலில் புற்றுநோயாக உருவாகிறது.

நோயை கண்டுபிடிப்பது எப்படி?

கருப்பை வாய் புற்றுநோயை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் . பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வெள்ளைப்படுதல் அதிகமாக காணப்படும். மாதவிடாய் நீராக வெளியேறும். சில நேரங்களில் துர்நாற்றம் கலந்த வெள்ளை நீராக வெளியேறுவதும் உண்டு. மாதத்திற்கு ஒரு முறை நிகழும் மாதவிடாய் முடிந்த பின்னரும் கூட ஒரே மாதத்தில் மீண்டும் மாதவிடாய் ஏற்படுவதும் இதற்கான அறிகுறி ஆகும். அடிவயிறு வலி தொடர்ந்து ஏற்படுவதும் இதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்


இது போன்ற அறிகுறிகள் இருந்தால் பெண்களுடன் தயக்கம் இல்லாமல் தங்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். ஆரம்ப காலகட்டத்திலேயே இந்த நோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது எளிது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பெண்கள் குறைந்தபட்சம் 20 வயது கடக்கும் வரையில் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். சிறு வயது திருமணங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இது மட்டுமல்லாமல் ஹெச்பி வி வைரஸ் போன்ற காரணங்களினாலும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்கள் கட்டாயம் ஹெச்பிவி தடுப்பூசி எடுத்துக் கொள்வது போன்ற காரணங்களால் இது போன்ற புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்கலாம் என்றார்
Published by:Arun
First published:

Tags: Cancer, Cervical cancer, Local News, Theni

அடுத்த செய்தி