முகப்பு /தேனி /

தேனியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலத்த காயம்

தேனியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலத்த காயம்

X
விபத்துக்குள்ளான

விபத்துக்குள்ளான கார்

தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பொம்மைய கவுண்டன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலத்த காயம் அடைந்தார்.

வாகன விபத்து

தேனி மாவட்டம் குமுளி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைய கவுண்டன்பட்டி பிரிவு அருகில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேனி நகர் பகுதியை கடந்து செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் தொலைதூரத்தில் செல்லும் வாகனங்கள் தேனி நகர் பகுதி வழியாக செல்லாமல் புறவழிச்சாலையில் செல்வதற்கு என்று பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது . பைபாஸ் சாலையில் இருந்து கிராமப் பகுதிக்குள் செல்வதற்கு என தனியாக சாலை பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கார்

இந்த நிலையில் தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டி வீரப்ப அய்யனார் கோவில் பகுதியில் உள்ள கட்ரோட்டில் இருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து பைபாஸ் சாலையில் ஏற முயற்சித்து உள்ளார். அப்போது பைபாஸ் சாலையில் தேனி நகர் பகுதியில் இருந்து வத்தலக்குண்டை நோக்கி சென்ற கார் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயம் அடைந்த நபரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். விபத்தில் காயமடைந்த நபர்

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தேனி அல்லிநகரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Local News, Theni