முகப்பு /தேனி /

நடுவழியில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்.. உத்தமபாளையத்தில் பரபரப்பு..

நடுவழியில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்.. உத்தமபாளையத்தில் பரபரப்பு..

X
தீப்பற்றி

தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்

Car Caught Fire Suddenly in Uthamapalayam | தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் தனக்கு சொந்தமான ஆம்னி காரில் உத்தமபாளையம் நெடுஞ்சாலை வழியாக அனுமந்தன்பட்டி நோக்கி ஸ்னாக்ஸ் வியாபாரத்திற்காக சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆஞ்சநேயர் கோவில் அருகே வாகனம் வந்து கொண்டிருந்தபோது வாகனத்தின் முன் பகுதியில் எதிர்பாராத விதமாக புகை வர ஆரம்பித்தது. திடீரென வாகனத்தில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறி பின்பு தீப்பிடித்து எரிந்தது.

இதனை பார்த்த மணிவண்ணன் காரை விட்டு வேகமாக கீழே இறங்கியுள்ளார்.

தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்

காரில் மளமளவென பற்றி எரிந்த தீ கார் முழுவதும் வேகமாக பரவி தீக்கிரையானது. இதனை அறிந்து வந்த கம்பம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் காரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் இருந்து சாம்பலானது.

இதையும் படிங்க : இரவில் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஈரோடு ஜவுளி சந்தை பற்றி தெரியுமா?

மேலும் மணிவண்ணன் வியாபாரத்திற்காக காரில் வைத்திருந்த ரூபாய் 30 ஆயிரம் ரொக்க பணம் தீயில் பற்றி எரிந்து சாம்பலானது பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Theni