ஹோம் /தேனி /

பழனிசெட்டிபட்டி தனியார் ஹோட்டலில் திடீரென தீயில் எரிந்த கார் - அதிர்ந்து போன பட்டாசு கடைக்காரர்...

பழனிசெட்டிபட்டி தனியார் ஹோட்டலில் திடீரென தீயில் எரிந்த கார் - அதிர்ந்து போன பட்டாசு கடைக்காரர்...

பழனிசெட்டிபட்டி

பழனிசெட்டிபட்டி

Theni District Today News | பழனிசெட்டிபட்டியில் தனியார் ஹோட்டல் கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் கார் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. கார் தீ பற்றி எரிவதை அறிந்த தனியார் ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் .

சிவகாசியில் பட்டாசு கடை வைத்திருக்கும் மருதுபாண்டியர் மேட்டுப்பகுதியை சேர்ந்த   28 வயதுடைய கண்ணன் என்பவர்

தனது தம்பியின் திருமண விழாவிற்காக, தேனியில் திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக வந்துள்ளார்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் கார் பார்க்கிங்கில்  தனது காரை நிறுத்திவிட்டு, ஹோட்டல் உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த போது காரில் இருந்து புகை வருவதாக அருகிலிருந்தவர்கள் கூற உடனே பார்க்கிங்கிற்கு சென்று பார்த்த போது கார் முழுவதும் எரிந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:  10 தலைகளுடன் ராவணன்... வியக்கவைக்கும் புதுக்கோட்டை குடுமியான்மலை சிற்பங்களின் புகைப்பட தொகுப்பு!

பின்னர் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் தீயில் எறிந்து உருக்குலைந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதமும், பொருள் இழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Theni