முகப்பு /தேனி /

தேனி மதுராபுரி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. இருவர் பலியான சோகம்!

தேனி மதுராபுரி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. இருவர் பலியான சோகம்!

X
தேனி

தேனி விபத்து

Theni district | தேனி அருகே மதுராபுரி பிரிவில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம் மதுராபுரி பிரிவில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . ஒருவர் மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அக்ஜெய் என்பவர் காரில் தனது நண்பர்களான கோகுல் மற்றும் ஆனந்துடன் கேரளாவில் இருந்து பெரியகுளத்தை நோக்கி அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது தேனி அருகே உள்ள மதுராபுரி பிரிவு தீபன் மில் அருகே எதிரே ஹாலோ பிளாக் கற்களை ஏற்றி வந்த கர்நாடகா பதிவன் கொண்ட லாரி யுடன் நேருக்கு நேர் மோதியது.

இதில் கார் முழுவதும் உருக்குலைந்த நிலையில் கரை ஓட்டி வந்த அக்ஜெய் மற்றும் உடன் பயணித்த கோகுல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும், ஆனந்த் என்பவர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதிகாலையில் கேரள கர்நாடக வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தேனி அல்லி நகர காவல் துறையினர் லாரி ஓட்டுநர் முருகேசனை கைது செய்து இந்த விபத்து குறித்தான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், காரை ஓட்டிவந்த, வாகன ஓட்டுநர் அக்ஜெய் ஓட்டுனர் உரிமத்தில் உள்ள முகவரியை வைத்து இறந்தவரின் குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

First published:

Tags: Accident, Death, Theni