முகப்பு /தேனி /

கருச்சிதைவு நோய் பரவுது... உடனே தடுப்பூசி போடுங்க - தேனி மாவட்ட கலெக்டர் அறிவுரை

கருச்சிதைவு நோய் பரவுது... உடனே தடுப்பூசி போடுங்க - தேனி மாவட்ட கலெக்டர் அறிவுரை

கருச்சிதைவு நோய் 

கருச்சிதைவு நோய் 

Theni District | கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு வகை தொற்று நோய் காரணமாக புருசெல்லோசிஸ் எனும் கருச்சிதைவு நோய் ஏற்படுவதாகவும் எனவே கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுமாறும் தேனி மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

கால்நடைகளுக்கு ஏற்படும் கருச்சிதைவு நோய் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புருசெல்லோசிஸ் எனும் கருச்சிதைவு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு வகை தொற்று நோய் ஆகும். இந்நோய் அசைபோடும் கால்நடைகள், குதிரைகள், நாய்கள் மற்றும் மனிதர்களுக்கு பரவக்கூடியதாகும்.

இது அசைபோடும் கால்நடைகளுக்கு ஏற்படும் போது, இறந்த நிலையில் கன்று பிறப்பது, நலிந்த கன்று, நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால் உற்பத்தி குறைவு போன்ற அறிகுறிகள் தோன்றும். இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவது மிகவும் குறைவு.

ஒருமுறை இத்தடுப்பூசி போட்டுக்கொண்டால், வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புத்திறன் வெளிப்படும். தற்போது தேனி மாவட்டத்தில் 4 மாதம் முதல் 8 மாதம் வரை உள்ள கிடேரி கன்றுகளுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக கருச்சிதைவு நோய் (புருசெல்லோசிஸ்) தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கான தடுப்பூசி முகாம்கள் வருகிற 28ஆம் தேதி வரை கால்நடை மருத்துவமனைகளில் நடக்கிறது. தடுப்பூசி போடப்படும் கிடேரி கன்றுகளுக்கு காதுவில்லைகள் பொருத்தப்படும். தேனி மாவட்டத்தில் 40,000 டோஸ் கருச்சிதைவு நோய் தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

Must Read : கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 150 வயது... இந்த ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா!

முதல் சுற்றில் 12,300 டோஸ்கள் போடப்படவுள்ளன. தேனி மாவட்ட கால்நடை வளர்ப்போர் அனைவரும் தங்களது கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசிகள் போட்டு அவற்றை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Abortion, Local News, Theni, Vaccination