முகப்பு /தேனி /

சின்ன சுருளி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு.. தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் கிராமங்கள்..

சின்ன சுருளி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு.. தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் கிராமங்கள்..

X
சின்ன

சின்ன சுருளி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

Theni Break in a water supply Project pipe|ஆண்டிபட்டி அருகே சின்னச் சுருளி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான குடிநீர் வீணாகி பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு  

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோம்பைதொழு, காமன்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கையாக அமைந்துள்ள சின்னச்சுருளி அருவியில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

இந்த தண்ணீர் மலையிலிருந்து வரும் சுத்தமான தண்ணீர் என்பதால் அவற்றை அருவிப்பகுதியில் இருந்து நேரடியாக ஒரு பெரிய குழாய் மூலம் மலையடிவார கிராமங்களுக்கு கொண்டுவரப்படுகிறது. வரும் வழியில் கோம்பை தொழு கிராமத்திற்கு அருகே ஒரு சிறிய மேல்நிலை தொட்டியில் ஏற்றப்பட்டு அங்கு தண்ணீரில் உள்ள மாசுக்கள் அகற்றப்பட்டு பின்பு குடிநீர் விநியோகிக்க குழாய்கள் மூலம் மீண்டும் அனுப்பப்படுகிறது.

சின்ன சுருளி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

இத்தகைய குடிநீர் குழாயில் சின்னச்சுருளி அருவியில் இருந்து வரும் வழியில் 2 குழாய்களின் இணைப்பில் விரிசல் ஏற்பட்டு அந்த உடைப்பில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக்கொண்டு ஏராளமாக வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் தண்ணீர் சின்னச் சுருளி அருவிக்கு செல்லும் நடைபாதையில் பெருக்கெடுத்து ஓடி கீழே வருகிறது.

இதையும் படிங்க : அரிசி கொம்பன் யானை இடம்பெயர்வு.. மேகமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி எப்போது?

இவ்வாறு உடைப்பிலிருந்து தண்ணீர் வெளியேறுவதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை கோம்பை தொழு உள்ளிட்ட பல கிராம மக்கள் புகார் கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    எனவே, தேனி மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சின்னச்சுருளி அருகே குடிநீர் திட்டத்தில் குழாய்களின் உடைப்பை சரிசெய்து முறையாக தண்ணீர் வழங்கி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Theni