ஹோம் /தேனி /

அருவானாலே திருப்பாச்சேத்தி மட்டும் தானா?.. தேனில நாங்களும் ஃபேமஸ் தான்.. வாழையாத்துப்பட்டியில் விதவிதமா தயாராகும் அருவா..

அருவானாலே திருப்பாச்சேத்தி மட்டும் தானா?.. தேனில நாங்களும் ஃபேமஸ் தான்.. வாழையாத்துப்பட்டியில் விதவிதமா தயாராகும் அருவா..

தேனி

தேனி வாழையாத்துப்பட்டியில் விதவிதமா தயாராகும் அருவா..

Theni District News | தேனி மாவட்டம் வாழையாத்துப்பட்டி கிராமத்தில் தயாராகும் அருவாக்கள் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா, பழனி பஞ்சாமிர்தம் என ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்துவ அடையாளம் இருப்பதை போல தமிழகத்தில் அருவா என்றால் அது திருப்பாச்சேத்தி அருவா தான்.. மதுரை அருகாமையில் உள்ள சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் ஊர் முழுக்க அருவா பட்டரைகள் தான். இங்கு தயாரிக்கப்படும் அருவாக்கள் தனித்துவ புகழ்பெற்றவை.. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் அருவாக்களுக்கு புகழ்பெற்று விளங்கும் ஒரு கிராமத்தை பற்றி இத்தொகுப்பில் அறியலாம்..

தேனி மாவட்டம் பூதிபுரம் அருகே உள்ள வாழையாத்துப்பட்டி கிராமத்தில் அருவாக்கள் தயாரிக்கும் பட்டறை இயங்கி வருகிறது. இந்த கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக இயங்கி வரும் அருவா பட்டறை சிறு தொழிலாக தொடங்கப்பட்டு கைகளாலேயே அருவாக்கள் செய்யும் கைத்தொழிலாக நடைபெற்று வந்துள்ளது.

மேலும் படிக்க: தேனி வீரபாண்டி தடுப்பணையில் எடுக்கப்பட்ட பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்கள்

வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல் முருகன் என்ற இளைஞர் படிப்பை முடித்துவிட்டு முழு வேலை தொழிலாக அருவாக்கள் தயாரிக்கும் பட்டறையை நடத்தி வருகிறார் . இந்தப் பட்டறையில் வெவ்வேறு வகையான அருவாக்கள் தயாரிப்பதோடு அருவாக்களுக்கு தேவையான கைப்பிடியையும் தயாரித்து தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறார்.

அருவா தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளி

கைத்தொழிலாக நடைபெற்று வந்த அருவாக்கள் மற்றும் கைப்பிடி தயாரிக்கும் தொழிலை சிறு சிறு இயந்திரங்கள் மூலம் தயாரிக்கும் நுட்பத்தை கற்றுக்கொண்டும் இயந்திரங்கள் மூலம் அருவாக்களுக்கு தேவையான கைப்பிடியை தயார் செய்தும் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூகலிப்டஸ் மரத்திலிருந்து அருவாக்களுக்கு தேவையான கைப்பிடிகளை தயார் செய்கின்றனர். அருவாக்கள் தயாரிக்கப்படும் உலோகத்தினை திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அதனை கூர்மையான வடிவில் வெட்டப்பட்டு அதனை நன்றாக வெப்பப்படுத்தி பல்வேறு வகையான அருவாக்களை தயாரித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இங்கு கதிர் அருக்க பயன்படும் கதிர் அருவாக்கள் , மரவெட்ட பயன்படும் வெட்டருவாக்கள் , அருவாக்களுக்கான கைப்பிடி , மண்வெட்டி கைப்பிடி சுத்தியல் கைப்பிடி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை இங்கு தயார் செய்கின்றனர். இருபது ரூபாய் முதல் அருவாக்கள் இங்கு கிடைக்கும் எனவும் சில்லரை மற்றும் மொத்த விற்பனை என இரண்டும் நடைபெறுகிறது எனவும் , மாதம் சராசரியாக 25 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைப்பதாகவும் பட்டறையின் உரிமையாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்

Published by:Arun
First published:

Tags: Local News, Theni