ஹோம் /தேனி /

புத்தாண்டை புத்தகங்களுடன் தொடங்க புத்தக கண்காட்சி..! தேனியில் ஆர்வத்துடன் ஏராளமானோர் பங்கேற்பு.. 

புத்தாண்டை புத்தகங்களுடன் தொடங்க புத்தக கண்காட்சி..! தேனியில் ஆர்வத்துடன் ஏராளமானோர் பங்கேற்பு.. 

X
தேனி

தேனி

Theni Book Fair : 2023ம் ஆண்டு பொதுமக்கள் புத்தகங்களுடன் வரவேற்க வேண்டும் என்பதற்காக தேனி மாவட்டம் கம்பம் அரசமரம் பகுதியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாட கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, தமிழியக்கம் மற்றும் கம்பம் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தக கண்காட்சி கம்பம் அரசமரம் சிக்னல் அருகே நடைபெற்றது.

2022ம் ஆண்டு முடிவு பெற்று 2023 ஆம் ஆண்டு தூங்க உள்ள நிலையில் பொதுமக்கள் புத்தாண்டை ஏதேனும் ஒரு புதிய பழக்கத்துடன் தொடங்குவர். அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதி மக்கள் 2023ம் ஆண்டை வரவேற்கும் விதமாகவும், பொதுமக்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை தூண்டுவதற்காகவும் புத்தாண்டை புத்தகங்களுடன் தொடங்க வேண்டும் என்பதற்காகவும் அனைத்து புத்தகங்களும் குறைந்த விலையில் 30% தள்ளுபடியில் புத்தக கண்காட்சி மூலம் விற்பனை செய்யப்பட்டது.

சிறியவர்களை கவரும் புத்தகங்கள், தமிழ் துறை சார்ந்த புத்தகங்கள், வேளாண் துறை சார்ந்த புத்தகங்கள் , மீனவர்கள் தொடர்பான புத்தகங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்த சிறப்பு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க : 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் அறிவிப்பு? - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

ஒரு நாள் மட்டும் அமைக்கப்பட்டிருந்த இந்த புத்தக கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : சுதர்சன் - தேனி

First published:

Tags: Local News, Theni