முகப்பு /தேனி /

மாணவர்களுக்கு ரூ.100 கூப்பன்... தேனி மாவட்டத்தில் முதல் புத்தகத் திருவிழா... சுவாரஸ்ய நிகழ்வுகள்..!

மாணவர்களுக்கு ரூ.100 கூப்பன்... தேனி மாவட்டத்தில் முதல் புத்தகத் திருவிழா... சுவாரஸ்ய நிகழ்வுகள்..!

X
புத்தகத்

புத்தகத் திருவிழா  

Theni Book fair | தேனி மாவட்டத்தில் பொதுமக்களிடம் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதற்காக மாவட்டத்தில் முதன் முதலாக புத்தகத் திருவிழா மார்ச் 3 தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

பொதுமக்களிடம் புத்தக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் முதன் முதலாக புத்தக திருவிழா மார்ச் 3ஆம் தேதி தொடங்கியது . மயிலாட்டம், ஒயிலாட்டம் என தமிழரின் பாரம்பரிய நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேனி பழனிசெட்டிபட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக திருவிழாவில் 50 க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை கவரக்கூடிய புத்தகங்கள் அதிக அளவில் இந்த புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தகத் திருவிழாவின் அறிமுக விழாவில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகத்தை வாங்குவதற்காக 100 ரூபாய்க்கான  இலவச கூப்பன் வழங்கப்பட்டது. அதனைக் கொண்டு மாணவிகள் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும், மாணவிகள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் 500 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கும் பள்ளி மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த புத்தகத் திருவிழா இம்மாதம் 12ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தகத் திருவிழாவிற்கு பொதுமக்களை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

First published:

Tags: Book Fair, Local News, Theni