முகப்பு /தேனி /

சிறைவாசிகளை திருத்த தேனியில் புது முயற்சி.. ஆர்வத்துடன் புத்தகங்களை வழங்கிய பொதுமக்கள்!

சிறைவாசிகளை திருத்த தேனியில் புது முயற்சி.. ஆர்வத்துடன் புத்தகங்களை வழங்கிய பொதுமக்கள்!

X
சிறைவாசிகளை

சிறைவாசிகளை திருத்த தேனியில் புத்தக தானம்

Theni News : தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் அருகே உத்தமபாளையம் சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்த, பொதுமக்களிடமிருந்து புத்தகங்களை தானமாக பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சிக்னல் அருகே உத்தமபாளையம் கிளை சிறைவாசிகளுக்கு புத்தகம் வழங்க வேண்டி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புத்தகங்களை நன்கொடையாக வழங்கக்கோரி உத்தமபாளையம் கிளை சிறை கண்காணிப்பாளர் சார்பில் கூண்டுக்குள் வானம் என்ற புத்தக தானம் பந்தல் அமைக்கப்பட்டது.

தேனி மாவட்ட சிறை, மதுரை மத்திய சிறை கைதிகள் சிறையில் ஏற்கனவே நூலகம் உள்ள நிலையில், நூலகத்தில் இருக்கக்கூடிய புத்தகங்களை படித்து சிறையில் உள்ள கைதிகள் பொது அறிவை வளர்த்திடவும், தங்கள் வாழ்க்கை பயணத்தை நல்வழியில் செயல்படுத்தவும் உதவி வருகிறது.

இந்நிலையில், சிறையில் உள்ள நூல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், சிறைவாசிகளுக்கு பயன்படும் புத்தகங்களை பெறவும் தமிழக சிறைத்துறை தலைவர் அமரேஷ்பூசாரி ஆலோசனை பேரில் கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பின் கீழ் சிறைத்துறையினர் புத்தகம் தானம் பெற்று சிறை வாசிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஒரு ஆண்டில் வெறும் 4 மாதங்கள் தான் சம்பாத்தியம்.. வேதனையில் ஊட்டி படகு தொழிலாளர்கள்..

இதன் ஒரு பகுதியாக உத்தமபாளையம் சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு புத்தகம் வாசிப்பு பழகத்தை ஏற்படுத்தி, நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பொதுமக்களிடமிருந்து நல்ல புத்தகங்களை தானமாக பெற்று காவல்துறை அதிகாரிகள் சிறைவாசிகளுக்கு வழங்கி வருகின்றனர். அதன் அடிப்படையில் உத்தமபாளையம் சிறையில் உள்ள சிறைவாசிகளை நல்வழிப்படுத்த வேண்டி புத்தகம் தானமாக பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    உத்தமபாளையம் கிளைச் சிறை கண்காணிப்பாளர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கினர்.

    First published:

    Tags: Local News, Theni