முகப்பு /தேனி /

போடிநாயக்கனூர் சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூச விழா..

போடிநாயக்கனூர் சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூச விழா..

X
போடிநாயக்கனூர்

போடிநாயக்கனூர் சுப்ரமணிய சுவாமி கோவில்

Bodinayakanur Subramanian Temple : தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தைப்பூச திருநாளை முன்னிட்டு சுப்ரமணியர் திருக்கோவிலில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் முதலாக முருகனுக்கு பால், தேன், இளநீர், விபூதி, சந்தனம், திருமஞ்சன பொடி, பழச்சாறு உள்ளிட்ட 13 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேகங்கள் முடிந்த பின் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்தார். தொடர்ந்து, சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சர்க்கரை பொங்கல் மற்றும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Theni