ஹோம் /தேனி /

Theni News : போடி அணை பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதித்தும் ஆபத்தை உணராத உள்ளூர் மக்கள்..

Theni News : போடி அணை பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதித்தும் ஆபத்தை உணராத உள்ளூர் மக்கள்..

அணை

அணை பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சி

Theni Latest News : குரங்கணி வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனை பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தடையை மீறி ஆபத்தை உணராமல் குளித்து வரும் பொதுமக்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை பெய்த தொடர் மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை குரங்கணி வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

திடீரென பெய்த கன மழையால் அணை பிள்ளையார் அணைக்கட்டு பகுதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. வெள்ள நீரால் அடித்து கொண்டு வரப்பட்ட ராட்சச மரங்கள் அணைக்கட்டு மேல் பகுதியில் ஆபத்தான நிலையில் தேங்கி நிற்கிறது.

தொடர்ந்து போடிநாயக்கனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்

அணை பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சி

று கணிக்கப்பட்டுள்ளதாலும் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் அணைக்கட்டு பகுதிகளில் பொதுமக்கள் செல்லவோ, குளிக்கவோ கூடாது என்று தடை விதித்துள்ளனர்.

Flood
காவல்துறையினர் வைத்துள்ள எச்சரிக்கை பலகை..

காவல்துறையினர் கட்டுப்பாடு :-

நேற்று மட்டும் போடி நாயக்கனூர் பகுதியில் 43.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியதும் குறிப்பிடத்தக்கது. அணைக்கட்டு பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ள நிலையில், பொதுமக்கள் அதனை பொறுப்படுத்தாமலும் ஆபத்தை உணராமலும் அணைக்கட்டு நீர்வீழ்ச்சி பகுதிகளில் குளித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆபத்தை உணராமல் குளிக்கும் மக்கள்

அணையின் மேல் பகுதியிலும், நீருக்கு இடையேயும் பொதுமக்கள் கடந்து சென்று ஆபத்தான நிலையில் குளித்து வருகின்றனர். தேனி மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் ஆற்று பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்து வந்தாலும், காவல்துறையினர் அணைக்கட்டு பகுதி, ஆற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு வழங்கி பொதுமக்கள் குளிக்க விடாமல் தடுக்க முழு முயற்சியும் எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Published by:Arun
First published:

Tags: Local News, Theni