Home /theni /

தேங்காய் சிரட்டையில் கண் கவரும் கைவினைப் பொருள்கள்.. அசத்தும் போடி தம்பதி..

தேங்காய் சிரட்டையில் கண் கவரும் கைவினைப் பொருள்கள்.. அசத்தும் போடி தம்பதி..

தேனி

தேனி - கைவினை பொருள் தயாரிப்பு

Theni District News | போடிநாயக்கனூர் பகுதியில் தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி கண்களை கவரும் பூ ஜாடி, அகப்பை, வீணை உள்ளிட்ட கைவினை பொருட்களை தயார் செய்து அவற்றை சாலையோரமாக விற்பனை செய்து வருகின்றனர் கண்ணன் - உஷாநந்தினி தம்பதியினர்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் மரத்தினாலான சிறிய கைவினைப் பொருட்களை கைகளாலே தயார்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர் கண்ணன் - உஷாநந்தினி தம்பதியினர். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மரப் பொருட்களில் கைவினைப் பொருட்களை செய்து போடிநாயக்கனூரில் சாலையோரங்களில் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

மரப்பட்டறைகளில் தேவையில்லாத தேக்கு மரங்களை குறிப்பிட்ட விலைக்கு வாங்கி அதனை இழைத்து சிறிய அளவிலான அலங்கார பொருட்கள், கைவினை பொருட்கள் போன்றவைகளை கைகளாலேயே செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

கைவினை பொருள் தயாரிக்கும் கண்ணன்


கீ செயின், பேனா ஸ்டாண்ட், பென்சில் ஸ்டாண்ட் , குழந்தைகள் விளையாட்டு பொருள், சிறியரக மாட்டு வண்டி , வீணை, நாற்காலி, விளையாட்டு நாற்காலி , அழகுப் பொருட்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.

மேலும் தேங்காய் சிரட்டையிலிருந்து அழகு சாதன பொருட்களை செய்து விற்பனை செய்தும் வருகின்றனர். தேங்காய் சிரட்டைகளை வாங்கி அதனை நன்றாக இரு புறமும் தேய்த்து அதற்கு பாலிஷ் செய்து அகப்பை, பேனா ஸ்டாண்டு, பென்சில் ஸ்டாண்டு, பூ ஜாடி , வீணை என கண்கவரும் அலங்கார பொருட்களாக மாற்றி விற்பனை செய்து அசத்தி வருகின்றனர்.

கைவினை பொருள்


பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து  மரப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, வீட்டிலேயே இந்த அலங்கார பொருட்களை தயார் செய்து போடிநாயக்கனூரில் வாரச் சந்தை மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை இடங்களில் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கைகளால் செய்யப்பட்டு நீண்ட நாட்கள் உழைக்கும் மரப் பொருட்களுக்கு பொதுமக்களின் ஆதரவு குறைவாக உள்ளது என்கின்றனர் கண்ணன் மற்றும் உஷா நந்தினி தம்பதியினர்.

கைவினை பொருள்


இதுகுறித்து கைவினைப் பொருட்களை செய்து வரும் கண்ணன் கூறுகையில், "பிளாஸ்டிக் பயன்பாட்டை பொதுமக்கள் குறைத்து மரப்பொருட்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தொழிலை தொடங்கினேன். சிறு சிறு அழகிய பொருட்களை மரத்தினால் செய்தும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வாறு செய்தும் விற்பனை செய்து வருகின்றேன்.

குறைந்த விலை:

கடினமாக உழைத்து கைகளால் செய்து பொருட்களை விற்பனை செய்தால் அதற்கு மக்களின் ஆதரவு குறைவாகவே உள்ளது. 40 ரூபாய் முதல் மரத்தினாலான பொருட்கள் செய்து விற்பனை செய்து வருகிறேன். ஒரு பொருளுக்கு குறிப்பிட்ட விலையை கூறும் பொழுது மக்கள் அதனை பல மடங்கு விலையை குறைத்து கேட்பதால் வேறு வழியின்றி லாபம் இல்லாமல் விற்பனை செய்து வருகின்றோம். ஆனால் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் மக்கள் பேரம் பேசாமல் பொருட்களை வாங்கி செல்வது போல சாலையோர வியாபாரிகளிடமும் வாங்கி செல்ல வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சாலையோர வியாபாரிகள் பெரும்பாலும் உள்ளே லாபம் கொண்டு விற்பனை செய்வதில்லை அன்றாட பிழைப்பிற்கே வியாபாரம் நடத்தி வருகின்றோம். பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறித்து மரத்தினால் ஆன பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்\" என்றனர்.

இந்த தொழிலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 90037 84527 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி