முகப்பு /தேனி /

பொதுத்தேர்வு எழுத போகும் மாணவர்களுக்காக தேனியில் சிறப்பு யாகம்!

பொதுத்தேர்வு எழுத போகும் மாணவர்களுக்காக தேனியில் சிறப்பு யாகம்!

X
மாணவர்கள்

மாணவர்கள் கோயிலில் வழிபாடு  

Theni News |  தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் 10 , 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram, India

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு நடைபெற உள்ள நிலையில், பொதுத்தேர்வில் வெற்றி பெறுவதற்காக போடி ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் மாணவர்கள் தேர்வுக்கு எழுத பயன்படுத்தும் பேனா மற்றும் பென்சில் வைத்து வழிபாடு நடத்தியதோடு வழிபாடு நடத்திய பேனாக்கள் வைத்து தேர்வு எழுதும் பொழுது மனதில் புது நம்பிக்கை உருவாகும் எனவும் கூறினர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் 10 ,12ம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது

திருக்கோயிலில் நடைபெற்ற கல்விக்கு அதிபதியாக கருதப்படும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் தேர்வு யாகத்தில் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவிகளிடமிருந்து தேர்வு எழுதுவதற்கு பயன்படும் பேனா பென்சில் மற்றும் தேர்வு உபகரணங்கள் அனைத்தும் ஹயக்ரீவர் சிலை முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

பின்னர் பொதுத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் வெற்றி பெறுவதற்காக 108 மூலிகை பொருள்கள் மற்றும் 9 வகை பழ வகைகள் மற்றும் வஸ்திரங்கள் பயன்படுத்தப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில்

ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுடன் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பூஜையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட பேனா பென்சில் மற்றும் தேர்வு உபகரணங்கள் வழங்கப்பட்டது. வழிபாடு நடத்தப்பட்ட பேனா மற்றும் பென்சில் மூலம் தேர்வு எழுதும் பொழுது மனதில் புது நம்பிக்கை ஏற்படும் என மாணவ மாணவிகள் கூறினர்.சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, School student, Theni