ஹோம் /தேனி /

போடிநாயக்கனூரில் வீட்டின் படுக்கையறையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு

போடிநாயக்கனூரில் வீட்டின் படுக்கையறையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு

வீட்டில்

வீட்டில் பிடிபட்ட நல்லபாம்பு

Bodinayakanur | போடிநாயக்கனூரில் படுக்கையறையில் பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

போடிநாயக்கனூரில் படுக்கையறையில் பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நல்ல பாம்பு :

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கட்டபொம்மன் சிலை அருகில் உள்ள அரண்மனை அக்ரஹாரம் சுந்தரம் தெருவை சேர்ந்தவர் முகமது யாசின்(50) இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

இன்று காலை முகமது யாசினின் மனைவி படுக்கை அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அங்கு பூனையின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

அங்கு சென்று பார்த்தபோது சுமார் 6 அடி நீளம் உள்ள கொடிய விஷமுள்ள நல்ல பாம்பு ஒன்று பூனையை பார்த்து சீறியது. இதைக்கண்டு பதறியடித்த யாசினின் மனைவி அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். சத்தம் கேட்ட நல்ல பாம்பு அருகில் உள்ள பிரிட்ஜுக்கு அடியில் பதுங்கிக் கொண்டது.

சுமார் ஆறடி நீளமுள்ள கொடிய விஷம் உள்ள பாம்பு பதுங்கி இருப்பதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கொடிய விஷம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

நகரின் முக்கிய பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு பதுங்கி இருந்ததை கண்டு இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni