தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி பகுதி அடர்ந்த மலைப்பகுதி. இங்கு அரிய வகை உயிரினங்களும், உயர்ந்த வகை மரங்களும் உள்ள பகுதியாகும். தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் போடிநாயக்கனூரை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது முந்தல் பகுதியில் இருந்து குரங்கணி செல்லும் பாதையில் உள்ள அடகுபாறை எனும் வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்களும், அதில் வாழும் காட்டு மாடுகள், கேளையாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதாலும், காட்டுத் தீ ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மளமளவென பரவி வருகிறது. இதனால் அந்த வனப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காட்டுத் தீ தானாகவே பற்றி கொண்டதா? அல்லது யாரேனும் சமூக விரோதிகள் இச்செயலில் ஈடுபட்டார்களா? என்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : பணி ஓய்வு பெறும் நாளில் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்..
எனவே கோடை காலங்களில் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கோடை காலத்தில் குரங்கணி அருகே வனப்பகுதியில் ட்ரெக்கிங்ல் ஈடுபட்டு பின்பு காட்டுத் தீயில் சிக்கி 27 பேர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni