தேனியில் இருந்து போடி வரையிலான தண்டவாளம் பொருத்தும் பணி நிறைவு பெற்ற நிலையில் தற்போது இருப்பு பாதை சோதனைக்காக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மதுரை - போடிநாயக்கனூர் இடையிலான மீட்டர் கேஜ் பாதை கடந்த டிசம்பர் 31 2010ம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கி 12 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது.
இதில் கடந்த மே மாதம் 26ம் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான சேவை தொடங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தேனி போடி இடையிலான பணிகள் நடைபெற்று கடத்த 12ம் தேதி தண்டவாளம் பொருத்தும் பணி நிறைவு பெற்று எஞ்சிய பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தேனி - போடி இடையிலான அகல ரயில் பாதை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு கட்டத்தை எட்டி வரும் நிலையில் இன்று இருப்புப் பாதை ஆய்வு செய்வதற்காக தேனியில் இருந்து போடி வரையிலான ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மேலும், தேனி - போடி இடையிலான மூன்று ரயில்வே கேட்டுகளில் சிக்னல்கள் நிறுவப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னக ரயில்வே முதன்மை செயற்பொறியாளர் இளம் பூரணன், துணை செயற்பொறியாளர் சூரியமூர்த்தி, சிக்னல் துணை முதன்மை பொறியாளர் சுதீர் குமார், சிக்னல் எக்யூப்மென்ட் துணை முதன்மை பொறியாளர் சுரேஷ் தலைமையில் சிக்னல்கள் நிறுவப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் முதல் கட்ட பணியாக தேனியில் இருந்து போடி வரை சுமார் 16 கிலோமீட்டர் உள்ள மூன்று கேட் சிக்னல்கள் ஸ்டேஷன் அருகிலுள்ள சிக்னல் பாயிண்ட்களில் ஆய்வு செய்வதற்காக தேனியில் இருந்து ரயில் போடி ரயில்வே நிலையம் வரை வரவழைக்கப்பட்டது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் ட்ராக் பைண்டிங் இன்ஜின் கொண்டுவரப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு போடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருவதால் போடிநாயக்கனூர் பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni