ஹோம் /தேனி /

போடியில் கல்லூரி மாணவர்களை தாக்கிய மது பிரியர்கள்... வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்....

போடியில் கல்லூரி மாணவர்களை தாக்கிய மது பிரியர்கள்... வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்....

தர்ணாவில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

தர்ணாவில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

Bodinayakanur | தேனி மாவட்டம் போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி அருகே அரசு பொறியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போடி அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களை இரவில் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும், அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி அருகே அரசு பொறியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தனியாக விடுதியும் உள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு மாணவர்கள் கல்லூரியை முடித்து விடுதிக்கு சென்றபோது குடிபோதையில் இருந்த மர்ம நபர்கள் மாணவர்களை தாக்கி அதில் ஒரு மாணவனை அடித்து முட்புதரில் வீசி சென்று விட்டதாகவும், தற்போது அந்த மாணவன் மேல் சிகிச்சைக்காக கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கூறினர்.

இதையும் படிங்க : தேனி வீரபாண்டி கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்து பலி

இதையடுத்து, அரசு பொறியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், மாணவனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும் தங்கள் கல்லூரியில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி தெருவிளக்கு அமைத்து தரக்கோரியும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து கல்லூரி வளாக முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தாக்கிய மர்ம நபர்களை கைது செய்வதாகவும், அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கும், தங்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாகவும் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மாணவர்களே பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் மேலச்சக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் கண்ணன் டாஸ்மாக் மதுபான கடை அகற்றுவதற்கு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான புகார் மனு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளதாகவும், ஹாஸ்டல் செல்லும் பகுதிகளுக்கு தெருவிளக்கு அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni