போடிநாயக்கனூர் நகராட்சிப் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் குழாய் உடைந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் குடிநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
குழாய் உடைப்பு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனை பின்புறம் உள்ள கருப்பசாமி கோவில் அருகில் ஊரின் மையத்தில் குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியிலிருந்து செல்லும் முக்கிய குழாய் உடைந்து சாலைகளிலும் தெருக்களிலும் குடிநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இதுகுறித்து நகராட்சி குடிநீர் வடிகால் வாரியத்திடம் இப்பகுதி மக்கள் தகவல் கூறியும் உரிய நேரத்தில் பணியாளர்கள் வராததால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக உடைந்த குழாயிலிருந்து குடிநீர் வெளியேறியது. குடிநீர் இப்பகுதி முழுவதும் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இப்பகுதியில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் இப்பகுதியில் உள்ள கோயில்களையும் கடைகளையும் சுற்றி தண்ணீர் சூழ்ந்ததால் கோவிலுக்கு சென்று வழிபட முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு முறையாக குடிநீர் வழங்காமல் இருப்பதாக புகார் இருந்துள்ள நிலையில், தற்போதய சூழலில் குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் கலந்து வீணானது வேதனை அளிக்கிறது எனவும், மழை குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் சூழலில் இதுபோன்ற செயல்பாடுகளால் போடி நகரில் பெரும்பாலான தெருக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
தேனியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதலை தொடங்கிவைத்த ஆட்சியர்
இது குறித்து போடிநாயக்கனூர் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் விரைவில் குழாய் உடைப்பு சீர் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni