ஹோம் /தேனி /

ஜான் பென்னிக்குவிக் பிறந்தநாளை முன்னிட்டு கம்பம் நகரில் ரத்ததான முகாம்..!

ஜான் பென்னிக்குவிக் பிறந்தநாளை முன்னிட்டு கம்பம் நகரில் ரத்ததான முகாம்..!

X
ரத்த

ரத்த தான முகாம்  

Theni blood donation camp | தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஜான் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு 7வது ஆண்டாக ஒக்கலிகர் இளைஞர் நலப் பேரவை தம்பிரான் கவுடர்கள் இளைஞர் அணி சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum) | Theni

தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

ரத்ததான முகாம் :-

தேனி, மதுரை, திண்டுக்கல் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கில பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த நாளான ஜனவரி 15- தேதி அரசு விழாவாக வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையை ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தேனி மாவட்ட மக்கள் உள்பட ஐந்து மாவட்ட மக்களும் மரியாதைக்குரியவராகவே பார்க்கின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாய சங்கத் தலைவர்களும் பென்னிகுவிக் பிறந்தநாள் அன்று சமூகம் சார்ந்த பல்வேறு பணிகளை செய்வார்.

அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஒக்கலிகர் இளைஞர் நலப் பேரவை , தம்பிரான் கவுடர்கள் இளைஞர் அணி சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இந்த ரத்ததான முகாம் ஆனது கம்பம் நந்தகோபாலன் சுவாமி மண்டப பகுதியில் நடைபெற்றது .

தொடர்ந்து ஏழாவது ஆண்டாக நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் திருவிழாவிற்கு வந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்து சென்றனர். கம்பம் அரசு மருத்துவமனை மற்றும் பெரியகுளம் தலைமை அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் சார்பில் பெரியகுளம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி பாரதி தலைமையில் சேகரிக்கப்பட்டது.

கோவில் திருவிழா அன்று ஜான் பென்னிக்குவிக் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த சேகரிப்பு முகாம் நடைபெற்றது அனைவரும் கவனத்தைப் பெற்று பாராட்டுகளையும் பெற்றது

First published:

Tags: Blood Donation, Cumbum, Local News, Theni