Home /theni /

பெரியாரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க- தேனியில் பரபரப்பு

பெரியாரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க- தேனியில் பரபரப்பு

பெரியார்

பெரியார் பிறந்தநாள் விழா

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள காந்தி சிலையின் முன்பு பெரியாரின் திருஉருவப்படத்தை வைத்து திராவிடக் கழகத்தினர் மற்றும் தோழமை கட்சியினரின் சார்பில் பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கும், சமூக நீதி நாளாக கொண்டாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரியாரின் பிறந்த நாள் நிகழ்வாக திராவிடக் கழகத்தினர் மற்றும் தோழமை கட்சியினரின் சமூக நீதி நாள் ஊர்வலமாக கம்பம் நகர் தபால் நிலையத்திலிருந்து காந்தி சிலை வரை ஊர்வலமாக செல்வது என்றும் திட்டமிடப்பட்டு, பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாஜகவினர் போராட்டம்


இதனை அடுத்து கம்பம் நகரில் உள்ள காந்தி சிலை முன்பு திராவிடர் கழகம் சார்பில் கம்பம் தெற்கு போலீசாரிடம் அனுமதி பெற்று, இன்று( செப்டம்பர் 17) காலை காந்தி சிலை முன்பு திராவிட கழகத்தினர் பெரியாரின் திருவுருவ படம் அடங்கிய பிளக்ஸ் போர்டை வைத்திருந்தனர். மேலும் கம்பம் பகுதி முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

பெரியார் பிறந்தநாள் விழா


அதில் சனாதனம் அழியட்டும், சமர்தர்மம் மலரட்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் தேரடி அருகே பெரியாரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட திராவிடர் கழகத்தினருக்கு அனுமதி அளிக்க கூடாது என போலீசாரிடம் பாஜவினர் பலமணிநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மோடி, பெரியார் பிறந்தநாள் போஸ்டர்கள்


இதையடுத்து வஉசி திடல் பகுதியில் பெரியாரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுமாறு திராவிடர் கழக நிர்வாகிகளிடம் ஆய்வாளர் லாவண்யா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த திராவிடர் கழகம், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அனுமதி பெற்ற இடத்திலேயே பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்றனர். இந்நிலையில் பாஜகவினர் திராவிட கழகத்தினை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு கம்பம் குமுளி தேசியநெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் அதேசாலையில் எதிர் எதிரே நின்று சாலை மறியலில் ஈடுபட்டு பாஜகவை கண்டித்து கோஷங்களை முழங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. மேலும் திராவிட கழகத்தினர் மற்றும் தோழமை கட்சியினர் பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஊர்வலமாக வந்து கொண்டிருந்தபோது, பாரதிய ஜனதா கட்சியினர் கட்சி கொடியேந்தி ஊர்வலமாக அங்கு வந்து பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கும் ஊர்வலம் செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் வகையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு ஏ எஸ் பி ஸ்ரேயா குப்தா தலைமையில் பாதுகாப்புக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த போலீசார் இருதரப்பினரிடமும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்கள்.

சமாதான பேச்சு வார்த்தைக்கு பாரதிய ஜனதா கட்சியினர் உடன்படாததால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த சம்பவத்தால் கம்பம் நகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடை ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவி வந்தது.

பின்னர் காந்திசிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவ படத்திற்கு திராவிடர் கழகத்தினர், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்பகுதியில் பதற்றம் மற்றும் அசாம்பாவிதங்களை தடுக்க ஏராளானமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி